பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 100 திருக்குறட் குமரேச வெண்பா வத்த ராகி யாரையும் ஆராய்ந்து யாண்டும் சோர்வின்றி உணர்ந்து தெளிந்து வருபவனே மேலான ஒற்றன் என்பதை இவ் வீரன் விளக்கி கின்ருன். வேண்டுருவம் கொண்டு விரகுடன் ஒற்றிவரல் ஆண்டகைமை யாகும் அது. சாரர் சாதுரிய வீரர். - = - 587, அறிந்து தெளிதல் வண்டுருவாய் வந்து மறைந்தறிந்தான் வீடணன்பின் கொண்டான் தெளிவேன் குமரேசா-அண்டி மறைந்தவை கேட்கவற் ருகி அறிந்தவை ஐயப்பா டில்லதே ஒற்று. (எ) இ-ள். குமரேசா வீடணன் மறைந்து சென்று எதிரியின் வஞ்சத்தை அறிந்து ஏன் தெளிந்து வந்தான்? எனின், மறைந்தவை கேட்க வற்ருகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று என்க. இரகசியங்களே மருமமாக் கேட்க வல்லவனுய் அறிந்த உண்மைகளேத் தெளிவா மொழிய வல்லவன்ே ஒற்றன். மறைந்தவை என்றது வெளியே தெரியாதபடி மருமமா வைத்துள்ள கிலேகளே. அரிய மருமங்களே முறையே அறிந்து வருவதே ஒற்றனது கருமமாம். அரசர்க்கு இயல்பாகவே பகைவர்கள் நேர்கின்ற னர். எதிரிகள் புரிந்து வருகிற இரகசியங்களே எல்லாம் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது வேந்தன் கட மையாம். அந்தக் கடமையை உரிமையோடு உறுதி யாய்ச் செய்து வருபவர் ஒற்றர் ஆகின்ருர். வற்று ஆகி= வல்லமை யுள்ளவனாய். ஒற்றனுக்கு வன்மை எது? பிறருடைய அரிய மறைகளே உற்றுக் கேட்டு உணர்ந்து வெற்றியுடன் மீண்டு வரும் ஆற்றல்.