பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 28 திருக்குறட் குமரேச வெண்பா மதுவி னுள்ளும் அபினி யாதி யானபல் மருந்தினும் கதுவு புல்லர் வாழ்வினும் கலந்து வைகி யுலகெலாம் பொதுவில் நின் வசத்தினிற் பொருத்தும் எம்மை யாவரே எதிர் புகுந்து வெல்ல வல்லர்? என்றில் வாறு இயம்பின்ை.(4) (மெய்ஞ்ஞான விளக்கம்) மமதை என்னும் தீயவன் இவ்வாறு தனது வீசப் பிரதாபங்களே விரித்துப் பேசி யிருக்கிருன். மதமும் மறதியும் கணவனும் மனேவியும் எனக் கலந்துள்ளன. அறிவு அன்பு ஆண்மை முதலிய மேன்மைகள் யாவும் மாப்ந்து ஒழியும்படி மறவி மருமமாய்ப் புரிந்துவரும்: அதல்ை புகழ் இழந்து பழி படிந்து அழிந்தவர் பலர் என்பதை இதில் அறிந்து கொள்கின்ருேம். செய்த நன்றியை மறப்பது பெரிய பாவம்; உய்தி யில்லாத அந்தப் பாதகத்தை மறதி உறுதியாய்ச் செய்து விடுகிறது. மறந்தவன் இறந்தவன் ஆகிருன். சிறந்த மெய்ப் பொருளே அழிவிலா மனியைத் தெரிந்துமுக் காலமும் உணர்ந்து துறந்தவர் இதயா சனத்திருந் தவனே த் தொடரின்ப துன்பமற் றவனேப் பிறந்தபல் லுயிர்கள் மனத்தள வு றைந்து பிறப்பிறப்பு ஒன்றிலா தவனே மறந்தவர் சுவர்க்கப் பதியையும் மறந்து மண்ணினில் மதிமறந் தவரே. (சீரு) அறிவுள்ள மனிதப் பிறவியை அருளியிருக்கும் இறைவனே நன்றியறிவுடன் நினேந்து உய்யாமல் மறங் தவர் இ ரு ைம யு ம் இழந்து அறிவிலிகளாயிழிந்து அவமே அழிந்து போகின்றனர் என இது குறித்துளது. வாழ்வின் கிலேமையை உணர்ந்து, வருவதை ஒர்ந்து மதிநலமுடன் செயல் புரிபவரே உயர்வுறுகின்றனர். மறப்புடையவர் பிறப்பின் பயனே அடையாமல் பேதை யராய்ப் பீழை படிந்து ஏதம் உறுகின்றனர். இறப்பெனும் உண்மையை எண்ணி யுணர்ந்து சிறப்புயிர்க் காவது செய்யார்-மறப்பென்னும்