பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 .ெ ச் சா வா ைம 2829 பாவிவசப் பட்டுப் பழிதுயராய்ப் பாழ்படிந்து நா விவசப் பட்டார் நலிந்து. பிறந்த பயனே விரைந்து பெருமல் மறந்திருப்பவர் மதிகேடர் என இது இகழ்ந்துள்ளது மறவி கொடி யது; இசையைக் கெடுக்கும்; வசையைக் கொடுக்கும். அது நேராதபடி கினேங்து தெளிந்து சீராய் வாழ்க. பொச்சாப்பு உடையவர் புகழினை அடையார். இகழ்வினை யடைந்து வருந்துவர். இவ் வுண்மையை இந்திரத்துப்மனும் துடியந்தனும் விளக்கி நின்றனர். ச ரி த ம். இந்திரத்துய்மன் என்பவன் சந்திரகுல வேங்தன். சுந்தர வடிவினன். கலேகள் பலவும் கற்றுத் தெளிந்த வன். அரிய பல உயர் குணங்கள் இவனிடம் உரிமை யாய் அமைந்திருந்தன. நீதி முறையுடன் இவன் அரசு புரிந்து வந்தான். இவனுடைய ஆட்சி யாண்டும் மாட்சி தோய்ந்து வந்தது. மகத்துவம் மிகுந்த அகத்திய முனி வரும் இவனுடைய கிலேமை நீர்மைகளே அறிந்து வியக் தார். இவனே நேரே கண்டு மகிழ வேண்டும் என்று கருதினர். தாம் காண வருவதாக ஒ ரு தேதியைக் குறித்து இவனுக்கு முன்னதாகவே அறிவித்திருந்தார். அம் மாதவன் வரவை இம்மன்னனும் எதிர்பார்த்திருங் தான். பின்பு அதனே மறந்து போனன். குறித்தபடியே குறித்த காலத்தில் அவர் வந்தார். அதுபொழுது இவன் பூசை புரிந்திருந்தான். நாம் வலிய வங்து அரண்மனை வாசலில் கின்றும் நம்மை இவன் உவந்து வரவேற்று உபசரிக்கவில்லையே என்று குறுமுனிவர் பெரு முனிவு கொண்டார்: " மதம் மண்டியிருந்தமையால் இவன் மத யானே யாய்த் திரிக ' என்று அ வ ர் சபித்துவிட்டுச் சென்ருர். அவ்வாறே இவன் ஆயினன். நரேந்திரனுய் இருந்தவன் கசேந்திரய்ைத் திரிங்தான். சிறிய ஒரு மறதியால் பெரிய அரச பதவியை இழந்து பெரும் பழி யடைந்தான். பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடை மையில்லை; இகழுடையராய் இழிந்து படுவர் என்பதை உலகம் காண இவன் நேரே உணர்த்தி நின்ருன்.