பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. உஊ க் க பம் உ ைட ைம 3) 1 ද්‍රි தகுதியில்லாதவரிடத்தும் பொருள் மிகுதியாய்ச் சேர்ந்து விடுகிறது; ஆகவே அதனே உடையவரை ஒரு பொருளாக மதிக்கலாகாது; மனத்திட்பமான ஊக்கம் உடையவரே உண்மை யாக மதிக்கத் தக்கவர் உறுதி யாகப் போற்ற வுரியவர் என இது குறித்துள்ளது. குறிப்புகளைக் கூர்மையாக் கருதி உணர்பவர் உண் மையான சிறப்புகளேயும் ஊக்கத்தின் தலைமையான உறுதி நிலைகளேயும் ஒர்ந்து தேர்ந்து கொள்வர். உள்ளத்தில் ஊக்கம் உடையவர் உலகத்தில் உயர்ந்த ஆக்கம் உடையராய்ச் சிறந்து திகழ்கின்ருர். இவ் வுண்மை கார் முடிச் சேரலன் பால் அறிகள் வந்தது. இவனது வாழ்வு அதிசய நிலைகளே யுடையது. ச ரி த ம். இவன் சேரர் குல மன்னன். சிறந்த குணநலன்கள் உடையவன். பெருங் கொடையாளி. அஞ்சாமையும் நெஞ்சத் துணிவும் உறுதியும் ஊக்கமும் இவனிடம் இயல்பாகவே அமைந்திருந்தன. தன் குடிகள் எவ்வழி யும் இன்பமாய் வாழ்ந்து வர அன்பு கூர்ந்து இவன் ஆட்சி புரிந்து வந்தான். அல்லல்கள் புரியும் குறும்பர் களே ஒல்லேயில் அடக்கி எல்லா வளங்களும் பெருகி வா நாட்டை இனிது பேணி வந்தமையால் யாவரும் இவ. இனப் புகழ்ந்து போற்றி வந்தனர். திசைகள் தோறும் தன் இசைகள் பரவி வர அடலாண்மையோடு ஆட்சி ஆற்றி வந்த இவனது மாட்சிகளேப் புலவர்களும் உவந்து பாடினர். காப்பியாற்றுக் காப்பியனுள் என்னும் சங்கப் புலவர் இவன் மீது உவந்து பாடியுள்ள நூலில் இருந்து ஒரு பாடலே அயலே காண வருகிருேம். உலகத் தோரே பலர் மற் செல்வர் எல்லார் உள்ளும் நின் நல் இசை மிகுமே: வாழ்க நின் வள னே நின்னுடை வாழ்கை; வாய்மொழி வாயர் நின் புகழ் எத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன் கலம் சிதறி,