பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 150 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளக்கிளர்ச்சி உணர்ச்சி உயர்ச்சி உற்சாகம் உறுதி என்பன எல்லாம் ஊக்கத்தின் உருவங்களே. உற்சாகம் வலிமன மிகுதி ஊக்கம். (பிங்கலந்தை) ஊக்கமே வலி உற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும் பேர். (நிகண்டு) ஊக்கத்தின் உருவங்களே இவற்றுள் உணர்ந்து கொள்கிருேம். உறுதி இழந்தான் உயிர் இழந்தான். உள்ளம் உடைமை வள்ளல் உடைமை. இந்த வுண்மை கங்திபாலும் ஒரியிடமும் நன்கு உணர வந்தது. இவரது சரிதம் உயர்நலம் உடையது. ச ரி த ம். நந்திமான் என்பவன் ஒரு குறு நில மன்னன். தொண்ட மண்டலத்திலே ஆறை என்னும் நகரிலிருந்து அரசு புரிந்தவன். பல நூல்களேயும் நன்கு பயின்று தெளிந்த சிறந்த மதிமான். ஆருயிர்கள் பால் பேரன்பு டையவன். யார் வந்தாலும் உள்ளம் உவந்து எதையும் வாரி வழங்கி வந்த வள்ளல். இவன் உடன் பிறந்த தம்பி ஒருவன் இருந்தான். சிந்துகன் என்னும் பெயருடைய அவன் இவனுடைய அரச செல்வத்தை அடைய விழைங் தான். கபடமாகச் சதி புரிந்தான். வசை கவிகளால் ஒரு நூலே இவன் மீது செய்வித்தான். அதற்கு கந்திக் கலம் பகம் என்று பெயர். மாரண வேள்வி போல் இவனது மரணம் கருதிக் காரணத்தோடு செய்த அந்த நூலேப் பலரும் அறியும்படி அக் கொடியவன் குறிப்போடு வெளிப்படுத்தின்ை. தன்மேல் வசை நூல் வெளி வங் துள்ளதை இவன் அறிந்தான். தனது தம்பியின் நசை யை உணர்ந்து இவன் நகைத் தான். அந்தப் பாடல்க ளேக் கேட்டுத் தான் மாண்டு போல்ை தம்பி அரசை இனிதே ஆண்டு கொள்வான் என்று இந்த வள்ளல் உள்ளம் துணிந்தான். கேடான வழியில் கிளர்ந்துள்ள அப் பாடல்களேக் கேட்கக் கூடாது என்று மந்திரிகள் தடுத்தும் இவன் சிங்தை உவந்து கேட்டான். முடிவில்