பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. உள க் க ம் உ ைட ைம 3.16 1 மனித வடிவாலும், வருதல் போதல் பேசுதல் முத லிய தொழில்களாலும் மக்களைப்போலக் காணப்பட்டா லும் அகத்தில் ஊக்கம் இல்லையேல் அவர் உ ண்மை பான மக்களாகார்; நடமாடுகின்ற ஒருவகை மரங்களே யாவார். வேறு என்றது கிலேயான அந்த மரங்களுக்கு உரிய சிரும் சிறப்பும் இந்த மனித மரங்களுக்கு @6 &ు என்பதை நேரே எண்ணி யுணரவங்தது. கல்வி செல்வம் முதலிய மேலான ஆக்கங்கள் எல் லாம் ஊக்கத்தாலேயே உளவாகின்றன; அதனை உரி மையாக உடையவரே பெருமையான மனிதர்; இழந்த வர் இழிந்த மரங்களே. உரம் இட்ட நிலம் வளமாய்ப் ப8ணத்து விளேயும்: உரம் உள்ள மனிதன் நலமாய்ச் செழித்துத் தழைத்துச் சிறந்து விளங்குவன். புறத்தே தெரியும் சிறப்புக்களுக் கெல்லாம் அகத்தே உரம் மூல காரணமா யுள்ளது. உள்ளத்தில் ஊக்கம் உடையவரே உலகத்தில் அதிசய மனிதராய் யாண் டும் துதி கொண்டு திகழ்கின் ருர். இந்த உண்மை உதயணன் பாலும், சாணக்கிய னிடமும் நேரே நன்கு தெரிய வங்தது. ச ரி த ம் . வத்தவ தேசத்து மன்னன் ஆன உதயணன் இள மையி லிருந்தே பல இடையூறுகளே அடையநேர்ந்தான். அந்தச் சோதனைகளே எல்லாம் தனது மனவுறுதியினலே கடந்து மதிமாண்புடன் உயர்ந்து வந்தான். ஒரு சமயம் கானகத்தில் தனியே செல்ல நேர்ந்தபோது பொல்லாத வேடர்கள் பலர் வில் வேல் வாள்களோடு தி ர ண் டு வந்து இவனே வளைத்துக் கொண்டனர். அவரெல்லோ ரையும் ஒல்லையில் வென்று தொலைத்து வெற்றி வீறு டன் வெளி யேறி வந்தான். இவனுடைய வீரத்திறல் களே அறிந்து யாவரும் வியந்து புகழ்ந்தனர். பல கலை களிலும் இவன் தலைமையான புலமை யுடையவன். வி&ன வாசிப்பதில் இவன் அதிசய கிலேயினன். இவ 396