பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 96 திருக்குறட் குமரேச வெண்பா மை, எள்ளி இகழுதற்கும் ஏதுவாகும். கையால் கடுத்து அடிப்பது அடி வாயால் பழித்து இடிப்பது இடி. அடி உடல் மேல் விழும்; இடி உள்ளத்தில் பாயும். நெடு மாடு போல் வளர்ந்தும் ஒரு தொழிலேயும் கருதாமல் மடி மண்டி யிருக்கிருயே: குடிகேடனை ே இருப்பதால் யாது பயன்? சோற்றுக்குக் கூற்ருய்ப் பூமிக்குப் பாரமாய்க் குடிக்குப் பழியா யிருப்பதினும் இறந்து ஒழிந்து போவது நல்லது என்று இவ்வாறு உற்றவர் இடித்து இகழுவர்: ஊராரும் கடுத்துப் பழிப் பர். இவ்வகையான இழிமொழிகள் எவ்வழியும் எழுந்து வந்து சோம்பேறியைத் தாக்கும் ஆதலால் இடி புரிக்கு. எள்ளும் சொல் கேட்பர் என மடியர் செவியில் படிகிற மானக் கேடுகளே விளக்கியருளினர். என்ன சொன்ன லும் சோம்பேறிகள் உள்ளம் திருந்தி உறுதி கலம் கானர் என்பது கருதி யுணர வந்தது. கண் கூடாப் பட்டது கேடுஎனினும் கீழ்மக்கட்கு உண்டோ உணர்ச்சி மற் றில்லாகும்-மண்டெரி தான் வாய் மடுப்பினும் மாசுனம் கண்துயில்வ பேரா பெருமூச்சு எறிந்து. (நீதிநெறி. 34) மடிபடிந்த இழி மக்களின் அழி துயரமான பழி நிலையை ஒர் உவமையால் இது தெளிவாக்கியுளது. மடியால் மிடி நேரும்: குடி கெடும்; பழியிழிவுகள் சேரும் என மடியின் கேடுகளே எடுத்துக் கூறி இடித்து அறிவுறுத்தினும் மடியர் தெளியார் மடிந்தே கிடப்பர். நெருப்பை நேரே மூட்டிலுைம் மலேப்பாம்பு இடம் பெயராது கிடக்கும்; நெருப்பு அகனய சுடு சொல்லேச் சுடச் சுடச் சொல்லிக் கடுத்து இடித்தாலும் சோம்பச் சோம்பியே கிடப்பர். மடியர் நெடிய மலேப்பாம்பு எனவே அடிபெயரா தாழ்ந்து கிடப்பர்-கொடிய மடிபடிய நேர்ந்தார் மடிந்தார்: அதன்பின் விடிவடைய நேரார் வினே.