பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் .ே கா ன் ைம 2889 நளமன்னன் செங்கோல் ஒச்சிய போது நிடத நாடு செழித்திருந்த நிலைமையை இது தெளித்துள்ளது. நல்ல பருவ மழையும் நயமான விளைபொருள்களும் செல்வவளங்களும் சேரவேண்டுமானல் அரசன் அங்கே செங்கோல் செலுத்த வேண்டும் என்பதை இங்கே தெளிவாகத் தெரிந்து கொள்கிருேம். சிறந்த நீதி மன்னன் நாட்டில் எல்லா வளங்களும் கிறைந்திருக்கும்; யாவரும் உவந்து வாழ்ந்து வருவர். இவ்வுண்மையைக் கரிகால்வளவன் காட்டி நின்ருன். ச ரி த ம் . இவன் சோழமன்னர் மரபினன். இளஞ்சேட் சென்னி என்னும் அரசனுடைய அருமைப் புதல்வன். அதிசய மதிமான். அரிய பல கலைகளே ஆய்ந்து தெளிந்தவன். தங்தை இறந்து போனமையால் இளமையிலேயே இவன் அரச பதவியை அடைய நேர்ந்தான். காவிரிப்பூம்பட்டி னத்திலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். மாறுபட்ட இருவர் தம் வழக்கை அரசன் பால் சென்று தீர்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்து வந்தார். இவனேக் கண்டார். இளவயதினன் ஆதலால் மிகவும் சிக்கலான தம் வாதத்தைச் சரியாக ஒர்ந்து செவ்வையாக நீதி செய்ய முடியாது என்று அம் முதியவர் திகைத்து நின் ருர். அவர் கருத்தைக் குறிப்பால் அ றி ங் த இவன் அவரை மறுநாள் வரும்படி பணித்து விடுத்தான். ஒரு முதியவன்போல் வடிவம் பூ ண் டு உரிய நேரத்தில் அரியனேயில் இவன் அமர்ந்திருந்தான். வழக்காளர் இருவரும் வந்தனர். யாவும் ேந .ே ர விசாரித்தான். உடனே தீர்ப்புக் கூறினன். நீண்ட காலமாகத் திராமல் வாதாடிப் பகைமை மண்டி நின்ற அவர் தகைமையோடு இவன் தீர்த்த நீதிமுறையை அறிந்ததும் அதிசய பரவச சாய் இவனைத் துதிசெய்து தொழுதனர். உரை முடிவு கானன் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப-நரைமுடித்துச் 362