பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

திருக்குறளில் செயல்திறன்

அடைவது சிறந்தது என்ற புதுக்கருத்தை விளக்குகிறது. இது முதல் யானை.

2. இடனறிந்து செய்

போர்க்களம் - ஒருயானை களத்தினுள்ளே நுழைந்து கூர்மையான வேலைத் தாங்கிப் போரிடவந்த வீரர்களை எல்லாம் தன் துதிக்கையால் வாரித் தரையில் அடித்துக் கொன்று குவித்தது. அன்று மாலை, அந்த யானை நீர் அருந்த ஏரிக்குச் சென்றபொழுது சேற்றில் காலை விட்டுக்கொண்டது. காலை எடுக்க முடியவில்லை. நகர முடியவில்லை, துன்பப்படுகிறது. பின்னால் ஒரு நரி வந்து யானையின் உடலைக் கடித்துத் தின்னுகிறது. யானையால் திரும்பி நரியை விரட்டவும் முடியவில்லை. இறுதியில் பலநாள் சேற்றிலே நின்று வேதனைப்பட்டுச் சாகிறது. குறள் இது-

        காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
        வேலாள் முகத்த களிறு (500)

காலையில் ஆறடி நீளமுள்ள வேல்களை வைத்திருந்த வீரர்களை யானை கொன்றது. இதற்குத் துணைசெய்தது போர்க்களத்தில் உள்ள கெட்டிநிலம். மாலையில் அரை அங்குல நீளமுள்ள நகம்படைத்த நரியை விரட்டத் துணை செய்யாதது சேற்றுநிலம். இதிலிருந்து செயல்திறனுக்கு பெரிதும் தேவை இடனறிந்து செய்தல் என்று தெரிகிறது. இது இரண்டாவது யானை.

3. மகிழ்ச்சியோடு செய்

மிகக் கடினமானதாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும். வீரன் ஒருவன் போர்ச்செயலில் ஈடு