பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

19

கொல்லாது விட்டது; கொல்லாக் குணமுடைய இப்பெண், என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறாள்" என்று.

இந்த மயக்கம் அவன் மேற்கொண்ட செயலைச் செய்ய முடியாமல் இழக்கும்படி செய்துவிட்டது.

ஆகவே, எதைச் செய்தாலும் இடையில் மயக்கத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.

        கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
        படாஅ முலைமேல் துகில். (1087)

இது ஏழாவது யானை,

8. கலங்காமல் செய்

எந்த நல்ல காரியத்தையும் எவர் தொடங்கினாலும் அதற்குப் பல இடையூறுகள் வரும். சிலர் புண்படுத்துவர். சிலர் பின்னுக்கு இழுப்பர். சிலர் துன்பப்படுத்துவர். சிலர் குறை கூறுவர். சிலர் பழியுங் கூறுவர். இன்னுஞ் சிலர் தடுக்கவும் செய்வர்.

இவைகளை யெல்லாம் கண்டு கலக்கமடைகிறவர்களால் எச்செயலையும் செய்ய முடியாது. அவர்கள் செயல்திறனையே இழந்துவிடுவர். ஒரு நல்ல செயலை மேற்கொண்டவர்கள் எத்தனை இடையூறு வந்தாலும் சிறிதும் கலங்காமல் கருமமே கண்ணாகக்கொண்டு அவற்றைச் செய்து முடிக்கவேண்டும் என்று வள்ளுவர் செயல்திறனுக்கு ஒரு இலக்கணம் கூறுகிறார். இதைக் கேட்ட நாம்,"இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் இதை நம்மால் எப்படிச் செய்ய முடியும்?" என்று வள்ளுவரையே கேட்கின்றோம். அவர் நம்மை அழைத்துக்