பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சிரித்து மகிழ இருவர் அல்லது பலர் ஒன்றுகூடி இருத்தல் வேண்டும். அப்படி இல்லாமல் ஒருவன் தன்னந்தனியாகவே சிரித்துக்கொண்டிருப்பானேயானால் அதனை நகைச்சுவை என்று சொல்லிவிட முடியாது. வேறு ஏதோ இடர்ப்பாடான காரணந்தான் இருக்க முடியும்.

சிரித்து மகிழ்தல்:

உலக இலக்கணம் - பொதுவானதாக ஒன்று உண்டு அஃதாவது அழுவதற்கு ஒருவரே போதும்; சிரிப்பதற்கு இருவர் வேண்டும் என்பதாகும். சிரித்து மகிழ்தல் என்னும் நகைச்சுவைக்கு முகமல்லாது வேறு எந்த உறுப்பும் காரணமாவது இல்லை. அதனால்தான் மேலான அவயவங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ள முகத்தினை உடம்புக்கே சிறப்பான பகுதியென்று நாம் கூறிக்கொள்ளுகிறோம்.

எனவே தான் சிரித்து மகிழ முகமே இலக்கணமாயிற்று; இடமாயிற்று என்று அறிகின்றோம். இன்னும் கொஞ்சம் விளக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் மனத்தில் தோன்றும் எந்த உணர்ச்சியினையுமே முகந்தான் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

ஒருவன் முகத்தை மறைத்துக்கொண்டு முகமலர்ச்சி கொண்டு புன்முறுவல் கொள்வானேயானால் அவன் அவ்வாறு மகிழ்ச்சியுடன் இருக்கிறான் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாது. ஏன்? முகம் மறைக்கப்பட்டிருப்பதால் உடம்பின் வேறு பகுதிகள் மறைக்கப்படாமலிருந்தாலும் அந்தப் பகுதிகள் அவனுடைய மன உணர்ச்சியைக் காட்டா, ஆதலால் முகந்தான் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் மூலப் பொருள் என்பது தெளிவாகிறது.

நகையும் முகமும்:

“அவருக்கு முகம் நன்றாக இல்லையே”...“முகத்தை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்?”... “முகத்தைச் சுளித்-