பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நகைச்சுவை முதலில் மனமகிழ்ச்சியினை உண்டாக்கி, பின்னர் முகமலர்ச்சியினைக் கொடுக்கும். முகமலர்ச்சி புன்முறுவலினைத் தந்து பிறகு சிரிப்பு என்னும் நிகழ்ச்சி யினையும் காட்டுவதாகும். எனவேதான் நகைச்சுவை என்ற பெரும் பகுதிக்குள் மனமகிழ்ச்சி என்னும் முதற்படி நிகழ்ச்சியும் அடங்கியிருக்கின்றது.

உலக மக்களோடு கலந்து பழகி மகிழ்வதுதான் மனிதத் தன்மையில் தலைசிறந்த பண்பாகும். ஆசிரியரின் பேராண்மை இதனைத் தாங்கி நிற்கிறது. மனம் போன போக்கில் சிலர் பேசுவதைப் பழக்கத்தில் நாம் கண்டு வருகின்றோம்.

பண்பாடு:

எனக்கு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர் கூடத் தெரியாது’- “இந்த ஊரில் யாரையுமே எனக்குத் தெரியாது; என்னையும் யாருக்கும் தெரியாது”-இப்படிப்பட்ட வார்த்தைகளை வெட்கமில்லாமல் பேசுகின்றார்கள். இது மனித குலத்திற்கு எவ்வளவு இழிவான - புறம்பான-முரணான-கருத்து என்பதை நாம் சிந்தித்து அறிய வேண்டும்.

தன்னந்தனியே இருந்து வாழ்ந்து மறைகின்ற மனிதன் இவ்வுலகத்திற்குத் தேவையில்லை என்று கடுமையாகவும் கூறிவிடலாம். “நாம் உண்டு; நமது வேலை உண்டு; எதையும் நாம் காதில் போட்டுக்கொள்ளக் கூடாது”. இப்படிப் பேசுகிற பிறவிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படிப் பேசப்படுகின்ற வார்த்தைகளை நாம் எளிதாகக் கருதித் தள்ளிவிடவும் கூடாது.

மிகச்சிறிய கருத்துக்கள் போல் இவைகள் தோன்றினாலும் சமுதாயத்தை அரித்து விடுகின்ற வேர்ப்புழுக்கள் இவைகளன்றோ? இத்தகைய வேர்ப் புழுக்கள் போன்ற தன்மை கொண்ட மக்களை மக்களிடையே வாழ விடுதலும் ஆபத்து என்று கூறுதல் தவறாகிவிடாது. தனித்து வாழ்-