பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கின்றவன் நகைத்து மகிழ்ந்து வாழ்தல் என்பது முடியாததன்றோ?

அப்படிப்பட்டவனுக்கு இந்த உலகம் என்ள பயனுள்ளதாக இருக்கப்போகின்றது? அவனுந்தான் இந்த உலகத்தினை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? இருளில் கிடப்பவன் எதற்குச் சமம்? அவன் எதைச் செய்ய முடியும்? எதைக் காண முடியும்? ‘இருட்டறையில் இருப்பவன் குருடன்’ என்பது உலகப் பழமொழியன்றோ?

இருட்டறை:

இவ்வாறு பலருடன் கலந்து மகிழும் பண்பில்லாமல் இருப்பவனுக்கு இந்த உலகமே இருண்டு கிடக்கும் என்பது நம் வள்ளுவனாரின் அருமையான வாக்காகும். வள்ளுவனார் குறிப்பிட்டுப் பேசுகின்ற முறையே தனிச் சிறப்பாக அமைந்துவிடுகின்றது. பகல் இரவு என்னும் வேறுபாடு அறியாதவர்களே இவர்கள் என்று கூறுகின்றார். பகற்பொழுதும் இருளாகத்தானே இருக்கும் என்று அச்சுறுத்திக் கூறுகின்றார். யாருக்கு?

பலருடனும் நகைத்து மகிழ்ந்து பழகும் பண்பு இல்லாதவர்களுக்கு என்பதாகும். ‘நகல் வல்லர் அல்லார்க்கு’ என்ற குறளடிச் சொற்கள் நாம் பேசுகின்ற இக் கருத்தினைச் சுட்டிக் காட்டுகின்றன. நகைத்து மகிழ்தல் எவ்வளவு இன்றியமையாதது என்பதனை இக்குறளடி நமக்கு மெய்ப்பித்து விடுகின்றது. இத்தகைய மக்களுக்கு மிகப் பெரிய இவ்வுலகத்தில் பகற்பொழுதும் இருளில் இருப்பதேயாகும் என்று மேலும் ஆசிரியர் விரிவுப்படுத்திக் காட்டுகின்றார்.

ஏன் அவ்வாறு கூறுகின்றார்? பிறருடன் கலந்து மகிழாதவன் - உள்ளம் மகிழ வாழாதவன் - யாதும் அறிய மாட்டானே! ஆதலால்தான் பகலுங்கூட - வெளிச்சத்தினைத் தருகின்ற பகற்பொழுதுங்கூட அப்படிப்பட்டவனுக்கு