பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மனத்தில் தோன்றாமல் - மனத்தோடு தொடர்புகொள்ளாமல் முகத்தில் மட்டும் நகைப்புக் குறியினைக் காட்டினால் அது பயனற்றதாகும். அக் குறி நட்புக்கும் கூட்டுறவுக்கும் ஏற்றதன்று. அதனை ‘முகம் நக நட்பது’ என்று ஆசிரியர் வள்ளுவனார் குறிப்பிடுகின்றார்.

மனத்தில் மகிழ்ச்சி கொள்ளாமல் வேறு எண்ணத்தினை வைத்துக்கொண்டு முகத்தில் மட்டும் நகைக் குறியினைக் காட்டுகின்ற நண்பர்களும் உண்டன்றோ? அப்படிப்பட்டவர்களை நண்பர்களாகக் கொள்ளாதே என்பதுதான் வள்ளுவனாரின் அறிவுரையாகும்.

மனத்தினாலும் - அகத்தினாலும் - நகை - மகிழ்ச்சி கொண்டு அதன் காரணமாக முகமலர்ச்சி தோன்றுதல் வேண்டும். வெறும் முகம் நகைத்துக் காட்டும் நிகழ்ச்சி பயனற்றதாகும்.

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு

என்ற எளிமையானதொரு குறட்பா இக்கருத்தினை எடுத்துக் காட்டிவிடுகின்றது. இங்கே நாம் கண்டுகொள்ள வேண்டிய குறிப்பொன்று கிடக்கின்றது. நட்பு என்பது நண்பர்களை உண்டாக்கிக் கொள்ளுதலாகும்.

இது அவ்வளவு எளிதான காரியம் அன்று. நினைத்த நேரத்திலெல்லாம், உடனுக்குடனே நண்பர்களைப் பெற்றுவிட்டோமென்று பழகிக் கொள்ளுதல் மிகவும் ஆபத்தானதுமாகும்.

“காலையில் ரெயில்வே நிலையத்தில் ஒருவரைச் சந்தித்தேன், இருவரும் பழகினோம்; மாலைக்குள் என் மீது உயிரை விடுகிறார்” என்று ஒருவர் சொன்னார். இதைக் கேட்ட மற்றவர் அவருக்குத் தக்க பதில் சொன்னார்.

“அப்படியா? இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு நெருக்கமான நட்பு ஏற்பட்டுவிடுதல் இடராயிற்றே! காலை-