பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

யில் சந்தித்து மாலைக்குள் உங்கள் மீது உயிரை விடுகின்றார் என்றால் மறு நாளைக்குள் உங்கள் உயிரை எடுத்துவிடுவார் என்று பொருள்” என்பதாகக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டுச் சென்றார். இக் கருத்தினை இங்கு அவசியத்தைக் கருதித்தான் வற்புறுத்திக் கூறுகின்றோம்.

ஆழம்:

நட்பு என்பது உயிர்த் துணையாக இருக்க வேண்டியதொன்றாகும். உடம்பும் உயிரும் இருப்பது போல இருப்பதனையே நட்பு என்று கூறுதல் வேண்டும். அன்பு வளர்ந்து அதன் பிறகு ஆர்வம் என்னும் பண்பு பெற்றுத் தருகின்ற குழந்தைக்குத்தான் நட்பு என்று பெயர். ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று பேசப்படுகின்ற தலைவன் தலைவி வாழ்க்கைக்கு அடிகோலுவதாக இருக்கின்ற காதல் வாழ்க்கை ‘நட்பு’ என்னும் வரிசையில் வளர்கின்றது.

எனவே நட்பு என்பது உயிருக்குள் உயிராகக் கருதப்பட வேண்டிய நிகழ்ச்சியாகும். ‘நானும் அவளும் கலந்து இருந்து வாழ்கின்ற காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றதென்றால் உடம்பும் உயிரும் இணைந்திருக்கின்ற தன்மையான நட்பு’ - என்று பேசுகின்ற காதலன் வாயிலாக நட்பின் சிறப்பினைத் திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.

‘நெஞ்சத்து அகநக நட்பது நட்பு’ என்று குறித்துக் காட்டுகின்ற குறட்பாச் சொற்களுக்கு இலக்கணமாகத்தான் உள்ளக் காதல் கொண்ட காதலர்களின் வாழ்க்கை அமைந்து கிடக்கின்றது. அகம் எனப்படுகின்ற மனம் நக மகிழுமாறு-நட்புப் பூண்டவர்கள்தான் காதலர் என்பவர்களாவர்.

அகம் நகப் பழகுவது சிறந்த நட்பாகி அதன் அடிப்படையில் காதலாக-உயிர்க் காதலாக மிளிர்வதாகின்றது. ஆண் பெண் சேர்க்கை - காதல் - இல்லற வாழ்க்கை என்பதெல்லாம் உயிருடன் உயிர் ஒன்றுபடுகின்ற பெருஞ் சிறப்-