பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அதுவேபோல, உலக ஆசான் தந்துள்ள அறிவுரைகளின் ஆழ்ந்த கருத்துகளை ஊன்றிப்பார்க்கின்றபோது மிகச்சிறந்த உண்மைகள் புலப்படுகின்றனவென்பது வெள்ளிடை மலையாகும்.

உலகின் இயற்கை உண்மைகளை நம் கண் முன்னே நிறுத்திக்கொண்டு சிந்தித்து ஆராய்தல் இன்றியமையாததாகும். உலகில் மிகப் பெரிய பகுதியினை அடக்கிக்கொண்டிருப்பது கடல் நீர்ப்பரப்பு அன்றோ? ஆழமும் அகலமும் கொண்டது கடல் தானே?

கடல்:

மீன் பிடிப்பவர்கள் கடலின் அதிகமான ஆழத்திற்குச் செல்ல வேண்டியதில்லைதான். வலைவீசி மீன் பிடிக்கின்றார்கள். மீன்கள் கிடைக்கின்றன. விலைக்கு விற்கிறார்கள். மீனும் உணவாக முடிகின்றது. அளவுக்கேற்ற பணமும் கிடைக்கின்றது.

அதே கடலில் ஆழ்ந்து அடித்தளத்தில் செல்லுகின்ற ஒருவனுக்கு என்ன கிடைக்கின்றது? அவன் எதைக்கொண்டு வரமுடிகிறது. விலை மதிக்க முடியாத முத்துக்களைக் கொண்டுவருகின்றான். உலகம் உள்ளளவும் பெருஞ்சிறப்புடன் மேன்மை தாங்கி நிற்பது மூத்தன்றோ?

ஆழமாக மூழ்கியவன் முத்துக்களைச் காணுகின்றான். மேற்பரப்பளவிலேயே வலை வீசியவன் மீன்களைக் கண்டான். ஆ! என்னே, உலக இயற்கை! பேராசிரியரின் கருத்துரைகளில் ஆழ்ந்து மூழ்கி உயர்ந்த, உண்மைகளைக் கண்டு மகிழ்தல் நமது கடமையன்றோ!

நகைச்சுவையென்பது எப்போதும் இலை மறைகாய்போல் இருப்பதாகும். எடுத்துப் பேசும்போதும் நகைச்சுவை கொண்டுள்ள கருத்துகள் அங்ஙனமே கூறப்படுதல் வேண்டும். முற்றும் வெளிப்படக் கருத்துகளை வெளியிட்டு விளக்கப்படுவது நகைச்சுவையாகாது. நயமாகவும்