பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

குறிப்பிடுகின்றபோது பொதுவாக ஒரு குறிப்பினை ஆசிரியர் கூறுகின்றார்.

எப்போதும் குறைந்த அளவே உணவுண்ண வேண்டும். சிலரைப் பார்க்கிறோம்; ஏன் பலரென்றும் கூறுவதில் தவறில்லைதான்; நன்றாக வேண்டிய மட்டும் - அஃதாவது எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவும் -சாப்பிட்டு இனி முடியாது என்று உணர்ந்த பிறகுதான் ‘போதும்’ என்று எழுந்திருக்கிறார்கள்! இப்படிப்பட்டவர்களை என்னவென்று கூறுவது? இவர்களை என்ன பெயர் வைத்து அழைப்பது?

குறைவாக உணவு உண்பவர்களைத்தான் மனிதர்கள் என்று கூற வேண்டும் என்பதும், அளவு கடந்து விருப்பம் போல் சாப்பிடுகிறவர்களை மக்கள் கணக்கில் வைத்துப் பேசக்கூடாது என்பதும் ஆசிரியர் வள்ளுவனாரின் எண்ணமாகும். இதனை ஆசிரியர் வெளிப்படையாகக் கூறவும் விரும்பவில்லை.

அளவு மீறிச் சாப்பிடுகிறவர்களைக் கண்டிக்கவும் செய்கிறார். விலங்கினங்கள் (மிருகக் கூட்டம்) என்பதில் சேர்க்க வேண்டியவர்களென்றே மிக அதிகமாக உண்ணுகிறவர்களைக் குறிப்பிட விரும்புகிறார். ஆனால் நேரிடையாக ‘விலங்கு’ (மிருகம்) என்று கூறவில்லை. நாம் நன்கு சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய இடம்.

விலங்கினங்களும் அவை போன்ற மற்ற பிறவிகளும் அளவுடன் சாப்பிடுவதில்லை; அவைகள் சாப்பிடுவதை ‘இரை’ என்ற சொல்லினால் சொல்லுவது மரபு. பாம்பு இரை தேடுகிறது; இரை தின்னுகிறது என்று சொல்லுவோம்; பறவைகள் இரை தின்னுகின்றன என்றும் கூறுவோம்.

அந்நியர்கள் ஆட்சியில் - அதாவது வெள்ளையர்கள் ஆட்சியில்-எண்ணிறந்த வெள்ளையர்கள் எங்கும் நமது தேசத்தில் வேலைபார்த்து வந்தார்கள். சாப்பிடுவதைப்-