பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

நகைத்து மகிழ்தல் என்னும் அரிய பண்பாட்டினைக் கோபமானது எவ்வாறு அழித்துவிடுகின்றதென்று சுட்டிக்காட்டுகின்றார். ஆதலால் ‘நகைத்து மகிழ்தல்’ என்னும் பெருமையினைக் காப்பாற்றிப் போற்றிக் காக்க வேண்டியவர்கள் சினத்தினை எங்ஙனம் ஒதுக்க வேண்டும் என்பதனை அறிந்து நடத்தல் வேண்டும். இல்லையென்றால் ‘நகை’—சிரித்து மகிழ்தல்- என்னும் ஒன்றினைக் கோபம் கொன்றேவிடும் என்று அச்சுறுத்துகிறார் ஆசிரியர். கோபம் நகையினையும் கொன்றுவிடும் என்பதை அழகான முறையில் குறட்பாவொன்று விளக்கிக் காட்டுகின்றது.

கோபம் என்பதனை வெகுளி என்ற பெயரில் ஆசிரியர் அமைக்கின்றார். ‘வெகுளாமை’ என்றொரு பகுதி திருக்குறளில் கூறப்படுகின்றது. இது கோபத்திற்கு இடங்கொடுக்கக்கூடாது என்பதை விளக்கிக் கூறப்படும் பகுதியாகும். மக்கள் வாழ்க்கையில் கோபமே இல்லாமல் இருக்கலாமா? இருக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகள் எழுவது இயற்கைதான். இவைகளுக்கும் தக்க விடைகள் கண்டுணர வேண்டியதுதான். இதுவே மெய்யறிவு பெறுவதாகும்.

துறவிகள்:

வெகுளாமை (கோபம் கூடாது) என்ற பகுதியினைத் திருவள்ளுவர் ‘துறவறம்’ என்ற பெரும் பகுதிக்குள் அடக்கிக் கூறுகின்றார். முற்றுந்துறந்த முனிவர்களைப் பற்றித் துறவறம் என்ற பெரும் பகுதி பேசுகின்றது. துறவிகளுக்கு இருக்கவேண்டிய குணங்களெல்லாம் இப்பகுதிக்குள் சொல்லப்படுவதாகும்.

உலகில் பல்வேறு வாழ்க்கையினை மேற்கொண்டிருக்கும் மக்கள் வாழ்கின்றபடியால் துறவறத்தினை மேற்கொண்டுள்ள முனிவர்கள் இருந்து வரவேண்டிய முறைகள் துறவறத்தில் விளக்கமாக விரித்துக் கூறப்படுகின்றன. துற-