பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வறப் பகுதிகளில் கூறப்படும் அனைத்தும் இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்குப் பொருந்தா என்பதை நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

‘அவா அறுத்தல்’ என்றோர் அதிகாரம் துறவறத்தில் கூறப்படுகின்றது. இதன் பொருள் எப்பொருளின் மீதும் எள்ளளவும் பற்று இருக்கக்கூடாது என்பதாகும். இது முற்றுந் துறந்த முனிவர்களுக்கே பொருந்துவதாகும். அதுவே போன்று ‘தவம்’ என்னும் பகுதியும் தவம் செய்யும் முனிவர்களுக்கே ஏற்ற கருத்துகளை விளக்குகின்றது.

உலக ஆசைகளை விட்ட துறவற முனிவர்களால் மட்டும் முழுக்க முழுக்கப் பின்பற்றக்கூடியவைகளாக அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடாவொழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா வறுத்தல் முதலியனவெல்லாம் கூறப்படுகின்றன.

இத்தகைய அறிதற்கரிய உயர்ந்த பண்பாடுகளை உலக ஆசைகளை அறவே விட்டுத் தவம் பூண்டு உலகில் உயர்கின்ற பிறவிகள் அத்தனையும் ஒரே கண் கொண்டு பார்க்கின்ற முனிவர்கள் தழுவி வாழவேண்டும் என்பதாயிற்று, ஏனைய வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் இத்தகைய பண்பாடுகளை அவ்வாறே பின்பற்றி வாழ்தல் கூடாததாகும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டதாகும்.

காமம்:

உதாரணமாகத் திருக்குறளில் ஏனைய பிற பகுதிகளில் கூறப்படுபவைகளெல்லாம் துறவிகளுக்கு ஏற்றவையல்ல என்பதாம், ‘காமத்துப் பால்’ என்ற பெரும் பகுதியில் கூறப்பட்டுள்ளவைகளெல்லாம் துறவற முனிவர்களுக்குப் பொருந்தாதவைகள் என்று அறிதல் வேண்டும்.