பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

‘அறுவது சினம்’ என்று சொல்லி இருப்பார்கள் போலும்! இல்லறத்தில் வாழ்பவன் உலக மக்களோடு இருந்து வாழ வேண்டியவனாகையால் அவனுக்குத் துறவிகளுக்குச் சொல்வதைப் போல அறுதியிட்டுக் கூற முடியாத குணமாகி விட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

மனிதத் தன்மையினையும் கெடுத்து மனிதனைக் கீழ்ப் பிறவி என்று கருதும் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தி விடும் ஆற்றல் கோபத்திற்கு உண்டு. சிலரைப் பார்த்து நாம், “நீ என்ன மனிதனா, மாடா?” என்று கேட்டு விட்டால் என்ன விளையும் என்று நமக்குத் தெரியும். யாரைச் சொல்லுகின்றோமோ அவனுக்கு வருகின்ற கோபத்திற்கு அளவே இருக்க முடியாதல்லவா?

ஆனால் அதே ஆள் தனக்குக் கோபம் வருகின்றபோது என்ன சொல்லுகின்றான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். “எனக்குக் கோபம் வந்துவிட்டால் நான் மனிதன் இல்லை” என்ற வார்த்தைகளை அதே ஆள் சொல்ல நாம் கேட்கின்றோம். இப்படிப் பேசுவதற்குக் காரணம் என்ன? கோபம் வந்துவிட்டால் விலங்கினங்களை விட மோசமாக நடந்துகொள்வான் என்பதை அவன் தன்னை யறியாமலேயே ஒப்புக்கொள்ளுகின்றான். ஆதலால்தான் ஆசிரியர் ஒருவனுக்குக் கொடிய பகைவனாக இருப்பது கோபமேதான் என்ற கருத்தினை அடிக்கடி கூறி வற்புறுத்திப் பேசுகிறார்.

இல்லற வாழ்க்கையில் இருப்பவனுக்கு இருக்க வேண்டிய அளவுக்கு இருக்க வேண்டும் என்று நாம் கூறினாலும் பற்றுக்களை அறவே விட்ட துறவற முனிவர்களுக்குக் கோபம் என்பது அறவே கூடாது என்று ஆசிரியர் திட்டவட்டமாகக் கூறிவிடுகிறார்.

அவ்வாறு சொல்லி வைக்கும் இடத்தில் வெகுளியின் கொடுமையினைக் கூறி, அருமையான ‘நகுதல்’ என்னும்