பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பன்முறையும் நாம் சிந்தித்தறிய வேண்டிய நுட்பமான உண்மைகள் இக் குறட்பாவின்கண் அடங்கியிருக்கின்றன வென்பது தெளிவாகின்றது. பகைவர்கள் - நண்பர்கள்ஆகிய இருதரத்தினரை முன்னே நிறுத்தி வைத்துக் கொண்டு - நண்பர்கள் வேண்டா-பகைவர்களே மேலானவர்கள் என்று பேசுகிறார் நம் ஆசிரியர் என்றால், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு பழகுபவர்களில் எவ்வளவு கொடுமையானவர்கள் இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது. நகைப்பு - நகுதல் என்னும் பண்பாடு எத்தகைய அரிய உண்மைகளை நமக்குப் புரியவைத்துவிடுகின்றது.

அழுதல் :

அழவைத்தல் - சிரித்து மகிழவைத்தல் என்னும் இரண்டினையும் சிந்தித்துப் பார்க்கும்போது சிரிக்க வைத்து மகிழ்ந்து பழகுபவர்கள்தான் நண்பர்களாக இருக்க வேண்டியவர்கள் என்று நினைத்து இருந்துவிடாதீர்கள் என்று கூறுவது போல் கூறி நண்பர்கள் என்றால் அழவைத்து நன்மை செய்பவர்கள்தான் என்று எடுத்து விளக்குகின்றார்.

அழவைப்பதும் நேர்ந்த காலத்தில் இடித்துரைப்பதும் நல்ல நண்பர்களுக்கு இலக்கணமாகும் என்று தெளிவுபடுத்துகிறார். இப்படிச் செய்யும் பழக்கமுள்ளவர்கள் முதல் தரமான சிறந்த நண்பர்களுமாவர். ஆகவே அழுகின்ற அளவுக்கு நண்பர்களுக்குப் புத்தி சொல்லும் உரிமை கொண்டவர்களே நல்ல நண்பர்கள் என்ற தகுதிக்குள்ளாவர்.

உலகம் ஏற்றுக்கொள்ளாத அல்லது வாழ்க்கைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்கின்ற நண்பர்களை எவ்வாறு பக்குவப்படுத்துவது? அழும்படி நெருங்கிச் சொல்லித் திருத்த முடியாது என்பது குறிப்பு.

அழச்சொல்லியும் திருந்தாதவர்களை என்ன செய்வது. அடுத்தாற்போலவே ஆசிரியர் ‘இடித்துச் சொல்’ என்று