பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வழிகாட்டுகிறார், ‘அழச் சொல்லி’ அல்லது ‘இடித்து’ என்று குறட்பா ஆரம்பமாகிறது. எப்படிப்பட்ட கருத்துரைகளைச் சொல்லித் திருத்துதல் வேண்டும் என்றும் குறிப்பிட்டு விடுகிறார். உலக நடை - மக்கள் கருத்து என்பவைகளை எடுத்துரைத்து, பழக்க வழக்கங்களைச் சுட்டிக் காட்டினால் யாரும் திருந்தச் செய்வர் என்பதற்காக ‘வழக்கு’ என்னும் சொல்வினையும் அக் குறட்பாவில் அமைத்துக் காட்டுகின்றார்.

ஆதலால் அப்படிப்பட்ட அறிஞர்கள் - உலக வழக்குநடைமுறைகளைத் தெரிந்தவர்கள் ஆகியவர்களுடன் நட்புச் செய்தல் மிகவும் பயனுடையதாகும் என்பது தலை சிறந்த உண்மையாகும். ஆதலால் நகைத்து மகிழச் செய்யும் நண்பர்களை யெல்லாம் நண்பர்களாக நினைத்து விடாதீர்கள் என்று சொல்லியும் அழச் சொல்லியும் இடித்துக் காட்டியும் பழகும் நண்பர்களையே உயரிய நண்பர்களாகவும் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் குறட்பா பேசுகிறது.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.

எளிமையான சொற்களில் அருமையான கருத்துகளை மிகமிகச் சுருக்கமான முறையில் ஆசிரியர் நமக்குத் தந்து விட்டார். சுருக்கமாகக் கூறுவதே ஆசிரியர் வள்ளுவனாரின் ஒப்பற்ற ஆற்றலும் வழியுமாகும்.

‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது சிறந்த ஆற்றல்களில் தலை சிறந்ததும் அருமையானதுமாகும். மிக உயர்ந்த கருத்துகளையும் சுருக்கமாகக் கூறும் ஆற்றல் பெற்றவர்களே பேராசிரியர்களாக உலக ஆசான்களாக இருக்கும் தகுதியும் பெருமையும் கொண்டவர்களாவர்.

நமது பழக்கத்தில் நடைமுறையில் பேசுகின்ற போக்கில் கேட்டு வருகின்ற பழமொழி ஒன்றுண்டு. ‘அறிவு நெட்டையாக இருந்தால் எழுதுவது குட்டையாக