பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இருக்கும்; அறிவு குட்டையாக இருந்தால் எழுதுவது நெட்டையாக இருக்கும்’ என்பதே அப் பேச்சு மொழியாகும்.

அஃதாவது சுருக்கமாகவும் விளக்கமாகவும் எழுதுபவர்கள் அறிஞர்கள் ஆவர். சுருக்கமாக எழுதத் தெரியாமல் சுருக்கமாகக் கூறக்கூடிய கருத்துகளையும் அதிகமாகப்பெரிதாக-எழுதுகிறவர்கள் அறிவு வளர்ச்சி பெறாதவர்கள் என்பதுதான் அப் பழமொழியின் கருத்தாகும். மிக்க உண்மைதான். சிலர் சாதாரணமாகக் கடிதம் எழுதுவதைப் பார்க்கும்போதே நமக்கு விளங்கிவிடுகிறது.

கடிதங்கள்:

ஒரு பக்கத்தின் அளவிலேயே எழுதி முடிக்கக்கூடிய செய்திகளை விரித்து எழுதித் தேவையில்லாதவைகளையும் அத்துடன் எழுதிச் சேர்த்து மூன்று நான்கு பக்கங்கள் எழுதுவதையும் நாம் பார்க்கின்றோம். இப்படி எழுதுபவர்கள் இத்தனைப் பக்கங்கள் எழுதியும் அமைதிகொள்வதில்லை.

இப்படி எழுதிவிட்டுக் கடைசிப் பக்கத்தில் கடைசி வரியில் ‘மற்றச் செய்திகள் அடுத்த கடிதத்தில்’ என்றும் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது நம்மை யறியாமலேயே நமக்குச் சின்னச் சிரிப்பு வரத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம்? வேண்டுமென்றே அவர்கள் நீளமாக எழுதுகிறார்கள் என்பதா? இல்லவே இல்லை!

சுருக்கமாக எழுதத் தெரியாத காரணத்தினால்தான் அவ்வாறு எழுதுகிறார்கள் என்பதே பொருளாகும். விளக்க வேண்டிய இடத்தினை மட்டும் விரிவுபடுத்திக் கூறுவதே இலக்கணமாகும்.

உலகத்திற்குப் பொதுத் தன்மை யளவிலே அறவுரைகள் போதிக்க வந்த பெரியோர்கள் பலர். அவர்களிலே‘’