பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

பக்குவமாகத் தோண்டி எடுக்கத் தெரியாதவன் செடியைப் பிடித்து வேகமாக இழுத்துச் செடியுடனே எல்லாக் கடலைகளும் வரும் என்று எண்ணி அப்படிச் செய்வானேயானால் அவனுக்கு இரண்டு மூன்று நிலக் கடலைகூடக் கிடைக்காது என்று கூறலாம். செடியை மட்டும்தான் அவன் பார்க்க முடியும்.

குறட்பாவினைப் படித்துப் புரிந்துகொள்ள நினைக்கும் போது இத்தகைய நிகழ்ச்சியினை மனத்தில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

குறட்பாவின் சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு பொருள் கண்டுகொள்ளுதல் குறட்பாவின் ஆழத்தினையும் ஆசிரியர் வள்ளுவளுர் உள்ளத்தினையும் உலக அனுப வத்தில் குறட்பா அமைக்கப்பட வேண்டிய இடத்தினையும் கண்டறிந்து விடுதல் ஆகாது.

நிலக்கடலைச் செடியினைப் பிடித்து வேகமாக இழுத்தவன் கண்ட இரண்டு மூன்று நிலக்கடலை போலத் தான் குறட்பாவின் கருத்தும் அவனுக்குத் தெரிவதாகும். பக்குவமாகப் பறித்து மண்ணைத் தோண்டிச் செடியைப் பன்முறையும் அசைத்து அத்தனை வேர்க்கடலையினையும் கொண்டு பயனடைபவன் போலக் குறட்பாக்களில் அடங்கியுள்ள ஒவ்வொரு சொல்லின் ஆழ்ந்த பொருளினையும் அவைகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் காரணங்களையும், உலக நடையினையும் ஆசிரியர் காட்டும் உவமைகளையும், சுட்டிக்காட்டும் பொருள்களையும் நன்கு சிந்தித்துக் காணுகின்ற போதுதான் வள்ளுவளுரின் உள்ளக்கிடக்கை உலகப் பொதுமறை வாயிலாக எங்ஙனம் புலப்படுகின்றதென்ற உண்மையினை நாம் புரிந்து கொண்டவர்களாவோம்.

‘எல்லாப் பொருளும் இதன்பால் உள’ என்று பிற்காலத்துப் பெரும் புலவர்கள் திருக்குறளைப் பாராட்டிப் பாடிய உண்மைக் கருத்தும் பெருமையும் நமக்குத்