பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தோன்றும். ஏனெனில் கதைகள், வரலாறுகள் என்பனவற்றைப் பாடிய புலவர்களுக்கும் அறம், ஒழுக்கம், உலகியல், வாழ்க்கை முறை இவைகளை உணர்த்திப் பாடிய புலவர்களுக்கும் வேறுபாடு உண்டன்றோ?

மொழி :

சொல்லுக்குச் சொல் வேறுபாடு கருத்தாழமும் கொண்டிருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்ளுதல் தமிழ் மொழிக்கு இயல்பாகவே உண்டான சிறப்பினை அறிந்ததாக முடியாது. உலக முதன் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும் என்பது நடுவு நிலைமையாளர்களுக்கு எளிதில் விளங்குவதாகும். தனித்தனி எழுத்துக்களுக்குத் தனித்தனிப் பொருளும் சிறப்பும் கொண்டு இலங்குவது நமது தாய்மொழி யன்றோ?

அறிவு நிறைந்த தமிழ்ப் பேராசிரியர்கள் பல எழுத்துக்களை வைத்துச் சொற்கள் அமைக்காமல் இரண்டொரு எழுத்துக்களைக் கொண்டே சொற்களை அமைத்துக் கருத்தாழங் காட்டும் பெருமை தாய் மொழிப் பேராசிரியர்களுக்கே உண்டென்பது மிகையாகாது. அருமையான சொல்லமைப்பும் நகைச்சுவைச் சாயலும் நீதியுரைப்பதுமான பாடல்களைப் பாடுவதில் நீதி நூற்புலவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கட்குத் தனிச் சிறப்பு உண்டு.

அவர்களின் புலமை, மிகு பெருஞ்சிறப்பு வாய்ந்த தொன்று என்று திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற தமிழ்ப் பெரியார்கள் பாராட்டி யுள்ளதைத் தமிழுலகமே நன்கு அறியும். ஒரு முறை வேதநாயகம் பிள்ளை தம் அருமை மனைவியாருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போதே பாடலொன்றைப் பாடினரென்றும் அப் பாடல் பாடப்பெற்றபோது அவருக்கும் அவருடைய மனைவியாருக்கும் சுவையான வாக்கு வாதம் நடந்ததாகவும் கூறுவதுண்டு.