பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

பார்த்தவர்கள் கேட்டார்கள் . உடனே அவன் பெருமையாக அந்தச் செல்வரைப் பற்றிப் பேசினான் : “புண்ணியவான் நன்ருக இருக்க வேண்டும். நான் போய்க் கேட்டவுடன் தாராளமாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவர் நன்றாக வாழ வேண்டும்” என்று பலரிடமும் கூறி வாழ்த்திக்கொண்டிருந்தான். அதே செல்வரின் வீட்டிற்கு மற்றொரு ஏழை சென்றான். தன்னுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கூறி இனாம் கேட்டான். அதனைக் கேட்ட அச் செல்வர் மிகவும் மனமிரங்கி இருபத்தைந்து ரூபாய் கொடுத்தனுப்பினார். அவன் முகத்தில் மகிழ்ச்சிக் குறிகள் தோன்றவில்லை. கடுகடுப்பாகப் பேசிக்கொண்டு வந்தான். அவனைப் பார்த்த வொருவர் “உனக்கு அச்செல்வர் எவ்வளவு கொடுத்தார்?” என்று கேட்டார்.

அதற்கு அவன் தன்னுடைய முகத்தைச் சுளித்துக் கொண்டு கோபமாக, “”உம்; என்ன கொடுத்தான். பிச்சைக்காரக்காசு; இருபத்தைந்து ரூபாய் கொடுத்தான்; எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் தெரியுமா? ஏன்? ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் என்ன?” என்று சலித்துக் கொண்டான். ஐந்து ரூபாய் இனாம் பெற்றவன் பேச்சுக்கும் இவனுடைய பேச்சுக்கும் எவ்வளவு மாறுதல் ! என்னே உலகம் ! அவனவன் பண்பு எப்படியெல்லாம் மனிதனை மாற்றி விடுகிறது என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா? இப்படி எத்தனையோ உண்டு.

“நல்ல செயலினை - உதவியினைச் செய்தாலும் அதனால் செய்தவனுக்குக் குற்றம் உண்டாகி விடுமாம்; ஏன்? யாருக்குச் செய்கின்றோமோ அவர்களுடைய குணங்களை ஆராய்ந்தறிந்து செய்யாவிட்டால்.”

திருவள்ளுவர் தொழில் முறைகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்ற இடத்தில் மேற்கூறிய கருத்தினையும் விளக்குகின்றார். குறட்பா :