பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

நன்று ஆற்றலுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை.

எனவேதான் செயலினை - நன்மையினைச் செய்வது பெரிதன்று ‘அவரவர் பண்பு அறிந்து’ என்று குறிப்பிட்டுக் கூறிய சிறப்பான கருத்தினைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். நாம் செய்யும் நல்ல செயலுக்குத் தகுதியில்லாதவர்கள் அல்லது உரியரல்லாதவர்களுக்குச் செய்வதனால் செய்தவர்களுக்கே குற்றம் உண்டாகும் என்று கூறினார். மற்றவர்கள் கேட்பவர்கள் மனம் இசைவதாக இருக்குமா என்பதையும் புரிந்துகொண்டே நன்மையான செயல்களைச் செய்தல் வேண்டும் என்பதாம்.

எக் காரியத்தினையும் இடமறிந்து செய்தல் வேண்டும் என்ற குறிப்பில் வைத்துப் பேசுகின்ற முறையில் தனிப்பட்டவர்களின் தன்மைக்கு எடுத்துக்காட்டினைக் கண்டோம். நற்பண்புகளான செயல்களை இடமறிந்தும் செய்தால்தான் நன்மையாக முடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்ற முறையில் நகைத்தல் - நகைத்து மகிழ்தல் என்பதனைச் சில இடங்களில் ‘செய்யாதே’ என்று அச்சுறுத்திக் கூறுகின்றார் ஆசிரியர். ‘மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்காதே’ என்று திருவள்ளுவர் பேசுகின்ற இடம் திருக்குறளில் ஒன்றே ஒன்று தான் என்று கூறலாம்.

‘குசுகுசு’

‘குசுகுசு வென்று பேசுதல்’ என்று நடைமுறையில் பேசுவதை நாம் கேட்டிருக்கின்றோம். அதுவே போலச் சிலர் கூடியிருக்கின்றபோது இரண்டு பேர் தாங்கள் மட்டும் மறைவாக ஏதோ பேசுவதும் சிரிப்பதுமாக இருப்பதுண்டு.

பேரறிஞர்கள் - பெரியோர்கள் - கூடி இருக்கின்ற சபைகளில் அவ்வாறு பேசுதலும் சிரித்தலும் கூடாது என்று