பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

ஆசிரியர் அறிவுரை போதிக்கின்றார், அப்படிச் செய்வதால் தவறான அர்த்தத்திற்கு இடங்கொடுத்து விடுவதோடு பெரியோர்கள் கூடி இருக்கின்ற மன்றத்தில் அது ஒழுக்கத்திற்குக் கேடான பழக்கமாகும் என்பதையும் குறிப்பால் உணரவைக்கின்றார் ஆசிரியர்.

கூட்டமாக எல்லோரும் இருந்து பேசி நகைப்பதில் தவறு இருக்கமுடியாது. ஆனால் பெரியோர்கள் கூடி இருக்கும் மத்தியில் இருவர் மட்டும் சேர்ந்து சேர்ந்து நகைத்துக் கொள்ளுவதுதான் குற்றமென்று கூறுகின்ற அளவுக்குக் கூடக் கருதப்பட்டுவிடும்.

ஆன்ற பெரியார்கள் கூடி இருக்கின்ற சபையில் வீற்றிருக்கும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துகளைக் கூறிக்கொண்டு வருகின்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குறட்பாவினைக் காண்போம்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியோர் அகத்து.

‘பெரியார் அகத்து’ கூறப்பட்டுள்ள கருத்தினை அறிதல் வேண்டும். பெரியார்களுடன் நட்புக் கொள்வது அவர்களால் பாராட்டப்படுபவர்களாக இருக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படியிருக்க அவ்வாறான இடங்களில் எவ்வாறு நாம் நடந்துகொள்ளவேண்டும் என்பதும் தெரிந்துகொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தியேதான்.

ஆதலால்தான் மிக நுணுக்கமான உண்மைகளை ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டினார். காதோடு காது வைத்துப் பேசுதல் என்பதும் சேர்ந்து சேர்ந்து இவர் மட்டும் சிரித்துக் கொள்ளுவது அப்படிப்பட்ட பெரியோர்கள் கூடியிருக்கின்ற சபையில் மற்றவர்களின் எண்ணங்களைக் கூர்த்து கூர்ந்து கவனிக்கும்படி செய்யுமாதலால் இவ்விரண்டு

5