பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

‘செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து’ என்று குறட்பாவில் காண்கின்றோம், இங்கு அவித்தல் என்பது நகையினை அதாவது நகைத்து மகிழ்தல் என்பதனை அறவே ஒழித்து நீக்க வேண்டும் என்பதாகாது, ஏனெனில் ‘நகுதல்’ என்பது நல்லதொரு பண்பாடாகு மன்றே! நீக்கி ஒழுக வேண்டுமென்று ஆசிரியர் வற்புறுத்துவ தெல்லாம், ‘சேர்ந்த இருவர் நகைத்தல்’ என்பதேயாகும். ஆதலால் தான் ‘சேர்ந்த நகை’ என்று கூறினார்.

‘அவித்தல்’ என்பது குறிப்பான அளவில் வேகவைத்தல் என்னும் பொருள்படுவதாகும். உணவுப் பொருள்களை வேக வைத்தல் என்பது நாம் அறிந்ததேயாகும். நன்றாக வேக வைத்து உண்ணுவதே நன்மை தருவதாகும் என்பது வெளிப்படையான மருற்துவ உண்மையாகும்.

வேக வைத்த பிறகு பொருள்கள் உருவம் தெரியாமல் வேக வைப்பதற்கு முன்னர் இருந்த தோற்றமும் இல்லாமல் மறைந்து போதல் உண்டு. அதனுடைய குணமும் மாறி விடும் என்பதும் இயல்பே யாகும். ஆனால் ‘அவித்தல்' என்பதற்கும் ‘வேக வைத்தல்’ என்பதற்கு முள்ள நடை முறைப் பழக்க வேறுபாட்டினை நாம் அறிந்துணர்தல் வேண்டும். பழக்கத்தில் நாம் பேசுவதைக் கண்டுள்ளோம். ஒரு ‘வேக்காடு’ காட்டுதல் என்று சிலர் சொல்வதுண்டு.

அதாவது உருவத் தோற்றம் என்பது அப் பொருளுக்கு இதனுல் மாறுதல் உண்டாகி விடுவதில்லை. ஆனால் அதனுடைய இயற்கையான குணம் மாறி முளைப்புத் தன்மை அற்றுவிடும். இவ்வாறு அளவு கொண்டு ‘அவித்தல்’ என்னும் சொல்லினைப் புரிந்து சிந்திக்கும்போது அச் சொல்லின் நயமும் சிறப்பும் விளங்கும்.

பொறிவாயில் ஐந்து அவித்தான், பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

என்ற குறட்பா திருக்குறளில், முதல் அதிகாரத்தில், இறைவனைப் பற்றி விளக்கம் தருகின்ற முறையில் காணப்படுவதாகும்.