பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

திருவள்ளுவர் இப்படி நிகழ்ந்த வரலாறுகளை நம்பினர் என்பதற்குக் கடுகளவேனும் ஆதாரம் எங்குமே இல்லை. இதனை முதலில் தெரிந்து தெளிதல் வேண்டும். மேலுலக இன்பங்களை வெறுத்தும் கீழ்மைப்படுத்தியும் கூறுவதாகக் காணுகின்ற இடங்களும் குறட்பாக்களில் உண்டு.

திருவள்ளுவர் தமது அரிய நூலினை எழுதிய காலத்தில் இத்தகைய கதைகளும் வரலாறுகளும் மக்களிடையே ஆழமாகப் பதிந்திருந்தன வென்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். எனவே மக்களுக்கு உண்மையுணர்த்த வந்த உலக ஆசான் அறநெறிப் பாதையில் மக்களை அழைத்துச் செல்லும் முறையில் அவர்கள் உள்ளத்தில் நிலவி இருந்த கதை முறைகளையும் எடுத்துக் காட்டி அப்படிப்பட்ட கதைகளில் படிந்தும் பதிந்தும் உள்ள மக்களின் உள்ளங்களைப் புண்படுத்தாதவாறு அக்கதை வரலாறுகளை எத்தகைய முறையில் அமைத்துக் காட்ட வேண்டுமோ அவ்வாறே அமைத்துக் காட்டி அறநெறி மெய்யுரைகளைப் போதித்து வெற்றி கண்டார்.

இந்திரன் என்பவன் அழிக்கப்பட்டான் என்ற குறிப்பு ஆசிரியரின் கருத்திற்குத் தேவைப்பட்டதாகவும் முனிவர்களின் பெரும் ஆற்றலினைக் கண்டறிய உதவியதாகவும் எண்ணியபடியால் அக் கதையும் கூறப்பட்டதென அகல் என்றும், விசும்பு என்றும் ஆய்ந்த சொற்கள் கோமானாகிய இந்திரன் பெருமை புலப்படவும் அவனினும் ‘ஐந்த வித்தான்’ ஆற்றலுடையவன் என்பதை அறிதல் வேண்டும். ஆசிரியர் குறிப்பாகக் காட்டுகின்ற கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை நம்பினாரா இல்லையா என்னும் ஐயங்கள் தெளிவாகிவிடுகின்றன.

‘நகுதல்’ என்பதானது எப்படிப்பட்ட முறையில் எப்படிப்பட்ட இடத்தில் தகாததாக முடியும் என்பதை விளக்கும் குறட்பாவினைக் கண்டோம். வாழ்க்கைச் சம்பவங்களில் ‘நகுதல்’ என்பது எப்போதும் எல்லா