பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


பொதுவாகக் கூறும்பொழுது தூதுவர்கள் நல்ல தோற்ற முள்ளவர்களாகவும், அறிவு நிறைந்தவர்களாகவும் ஆற்றல் மிகுந்தவர்களாகவும் உலகியலறிவு செறிந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

வெளி நாட்டு மன்னர்களிடமும் அமைச்சர்களிடமும் பழகும் போதும் நமது நாட்டு முன்னேற்றக் கருத்துகளைப் பேசும்போதும் பயனல்லாதவற்றைப் பேசாமல் பொருள் நிறைந்த கருத்துகளைப் பேசி, தக்க நேரத்தில் நகைச்சுவையாகவும் கருத்துகளை எடுத்து விளக்கித் தமது நாட்டுக்கு நலம் தேடி வருதல் வேண்டும். நகைச் சுவையினை மிகவும் பயனுள்ள சிறப்பான இடத்தில் அமைக்கின்றார் ஆசிரியர் என்றால் அந்த இடம் இதுவே என்று கூறுதல் வேண்டும்.

'நகச் சொல்லி நன்றி பயப்பதாம் தூது' என்று ஒரு குறட்பா கூறுகிறது. வேற்று நாட்டரசர்கள் மனம் இசையாமல் இருப்பார்களே யானால் அவர்களிடம் கொடுமையான சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனம் மகிழச் சொல்லித் தன்நாட்டுத் தலைவனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான் என்பதாம்.

அறிவுடன் கூரிய இயற்கையறிவு படைத்தவனே தூதனாக இருக்கும் தகுதியுள்ளவன். அறிவும், உருவும், ஆராய்ந்த கல்வியும் ஆக இம் மூன்றும் திறம்பட நிறைந்திருப்பவனே தூதனாவான். இது தூதனுக்கு இருக்க வேண்டிய பல குணங்களில் ஒரு குறிப்பாகும். தூதர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருக்கவேண்டிய திறமைகளைப் பற்றிப் பழங்காலத்தில் பல கதைகளை அமைத்து நூல்கள் எழுதி வந்தனர்.

வேலைக்குத் தக்கவன் :

ஓர் அரசன் தனது நாட்டுக்கு நல்ல தூதுவன் ஒருவனை விரும்பினான். தக்கவன் இல்லாமல் சிந்தித்துக்கொண்-