பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


டிருந்தான். அப்போது அவனுடைய உறவினன் ஒருவனை அவ் வேலைக்கு அமைக்க வேண்டுமென்று உறவினர் பலர் அரசனை வற்புறுத்தினார்களாம். அரசன் அதற்கு இணங்க வில்லையாம். மேலும் மேலும் உறவினர்கள் வற்புறுத்தினார்களாம்.

அரசன் உறவினர்களைச் சமாதானப்படுத்தியும், தூதுவர்கள் மிகமிகத் திறமைசாலிகளாவும் உலகியலறிவு நிறைந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் எண்னும் பல உண்மைகளை எடுத்துக் கூறியும் உறவினன் என்பதற்காக வேண்டிப் பொறுப்பான பணியில் அமர்த்தக் கூடாது என்று மறுத்துஞ் சொன்னான். இவ்வாறு எடுத்துக் கூறித் தன்னிடத்தில் முன்னாள் அமைச்சராக இருந்தருடைய மகனை அத்தூதுவன் வேலைக்கு அமர்த்துவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் கூறினான்.

இதனைக் கேட்டதும் உறவினர்கள் கோபங்கொண்டு அரசனுக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். உடனே அரசன் அவர்களை அழைத்து ஒரு யோசனை கூற அவர்களும் கேட்டு அதற்குச் சம்மதித்தனர். தன் உறவினனையும் அமைச்சர் மகனையும் தனித்தனி நாட்டுக்கு அனுப்புவ தென்றும் அதுவே திறமையைச் சோதிக்கத் தக்க வழியென்றும் எல்லோரும் ஒப்ப முடிவு செய்தனர்.

அரசன் உறவினர்களுடன் கலந்து அவர்களது திறமையை எப்படிச் சோதிப்பது என்று முடிவு செய்தான். உறவினனிடத்திலும் அமைச்சர் மகனிடத்திலும் தனித்தனியாகச் சிறு சிறு பெட்டிகளைக் கொடுத்து அவைகளை அந்தந்த ஊர் அரசனிடத்தில் கொடுத்து வரச் சொன்னான். அந்த நாட்டு அரசர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் அதற்குத் தக்க பதில் கூறி வருமாறும் பணித்தான்.

இருவரும் அரசன் சொல்லியபடி வெவ்வேறு நாட்டுக்குச் சென்றனர். பெட்டிக்குள் என்ன வைக்கப்-