பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


பட்டிருக்கிற தென்று அவர்களுக்குத் தெரியாது. திறந்து பார்க்காமல் வெளி நாட்டரசர்களிடம் கொடுக்கவேண்டும் மென்பது அரசனின் கட்டளை யாயிற்றே.

அரசனின் உறவினன் தன்னைப் போகுமாறு சொல்லிய அவருக்குச் சேன்றான்; அந் நாட்டு மன்னனைக் கண்டான்; பெட்டியைக் கொடுத்தான். அந்த அரசன் பெட்டியை வாங்கியவுடன் அதனைத் திறந்து பார்த்தான்; திடுக்கிட்டான். அவன் முகத்தில் கோபக்குறி தாண்டவமாடிற்று. தூதுவனாக வந்த அரசனின் உறவினனை அப் பெட்டிக்குள் இருப்பதைக் காட்டி, "இவைகளை அனுப்பித் தன்னைக் கேவலப்படுத்திய காரணம் என்ன?" என்று கேட்டான்.

அப்போது தான் அரசனின் உறவினனும் அப் பெட்டிக்குள் இருந்தவைகளைக் கண்டான். 'விபூதி' போன்ற சாம்பலும் 'உரோமமும்' (சடை முடிமயிர்) அப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன. அரசனின் உறவினனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. விழித்தான். அந் நாட்டு அரசனின் கோபம் அதிகமாயிற்று. இந்த இரண்டினையும் அனுப்பி இருப்பதிலிருந்து தன்னை இழிவாகக் கருதிப் போருக்கு அழைக்கின்றான் என்று முடிவு செய்து விட்டான்.

உடனே தூதுவனாக வந்த அரசனின் உறவினனிடம் தான் போருக்கு அஞ்சியவனில்லை யென்றும் போர் செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்லி அனுப்பினான். அத்தனையும் அப்படியே கேட்டுவிட்டு ஊர் திரும்பித் தன் அரசனிடம் நடந்தவைகளைக் கூறினான். அரசனும் உறவினர்களும் மிகவும் கவலைப்பட்டனர். இன்னும் அமைச்சன் மகன் திரும்பி வாராததால் அவன் என்ன சேதி கொண்டு வருவானோ என்று காத்திருந்தனர்.

அறிவு :

அமைச்சனின் மகனும் தனக்கென்று குறிப்பிட்ட நாட்டு மன்னனிடம் சென்றான். தன் அரசன் கொடுத்த