பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


பெட்டியை அவனிடம் தந்து வணக்கம் செலுத்தினான். அந்த அரசன் பெட்டியைத் திறந்து பார்த்தான். அமைச்சன் மகனும் அப் பெட்டிக்குள் இருந்தவைகளைக் கண்டான். அவைகளைக் கண்ட அந்த அரசன் ஒன்றும் புரியாமல், வந்த தூதுவனைப் பார்த்தான்.

உடனே தூதுவனாகச் சென்றிருந்த அமைச்சன் மகன் புன்முறுவல் பூத்தான். பின்வருமாறு அரசனிடம் சொல்ல ஆரம்பித்தான். "அரசே! எங்கள் மன்னர் சென்ற வாரம் அரண்மனையில் யாகம் செய்தார். அந்த யாகத்தில் ஒரு தெய்வீகப் பூதம் தோன்றிற்று. அப்பூதம் அரசருக்கு விபூதியையும் தனது சடாமுடியையும் பிரசாதமாக அளித்தது. அப்பிரசாதத்தைப் பல அரசர்களுக்கும் எங்கள் மன்னன் அனுப்பி இருக்கிறார், தங்கட்கும் கொடுத்து வரச் சொன்னார்" என்று கூறினான் அமைச்சன் மகன்.

உடனே அந்த மன்னனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. தனது நன்றியைத் தெரிவிக்குமாறு சொல்லி வந்த தூது வலுக்கும் தக்க சன்மானம் கொடுத்து அனுப்பினான். திரும்பி வந்த அமைச்சன் மகன் தன் அரசனிடத்திலும் உறவினர்களிடத்திலும் நடந்தவற்றைக் கூறினான்.

இதனைக் கேட்ட அரசன், அவனுடைய சமயோசித புத்தியை வியந்தது மட்டுமன்றித், தூரது செல்பவர்களுக்கு இருக்கவேண்டிய நுட்பமான அறிவினை எல்லோருக்கும் எடுத்துக் கூறி அவனையே தன் தூதுவனாக அமர்த்திக் கொண்டான். இவ்வாறாகப் பழங்காலக் கதைகள் பல எடுத்துக்காட்டுகளாகக் கூறுவதுண்டு.

நல்ல முறையில் சிறந்த பேச்சு வல்லமையுள்ளவனே தூதுவவனாக இருக்கத் தகுதியுள்ளவனாவான் காலத்திற்கும் இடத்திற்கும் நேர்ந்தவாறு அறிவுடன் பொருந்திய கருத்துகளைக் கூறும் ஆற்றல் மிகுந்தவனே அப் பணியை வெற்றிகரமாக முடிக்கவல்லவன்.