பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


சொல்லுதல்' என்று இரண்டு முறை சொல்லுதல் என்பதனை வற்புறுத்தினார். தொகச் சொல்லுகின்றபோது விருப்பமுடன் கேட்பார்கள் என்பதும் நகச்சொல்லும்போது மனமகிழ்ந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன.

பேசுகின்ற ஆற்றலைக் குறிப்பிடுங்கால் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று பிறரிடம் பேசுவது: மற்றொன்று சபையில் - பலர் முன்னிலையில் விரிவுரையாற்றிப் பேசுவது. இரண்டிற்கும் பொதுவாகக் குறிப்பிட்டுக் காட்டுவதே சொற்களின் சிறப்பாகும் என்பதாம்.

நா:

மனித உறுப்புகளில் மிகமிக ஆற்றலுடையது 'நா' என்பதாகும். ஏனைய பிற உறுப்புக்களை யெல்லாம் இன்றியமையாத முறையில் வைத்துப் பேசினாலும் 'நா' மிகவும் வன்மை வாய்ந்தது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஆதலால் 'நா'வினைக் காப்பாற்ற வேண்டும் என்னும் கருத்தினை ஆகிரியர் மிகவும் அழுத்தமாகக் கூறி வைக்கின்றார். அந்த 'நா' வினைப் பற்றிப் பேசும்போது நாம் திகைத்து வியந்து மகிழும்படியான உண்மையொன்று வெளிப்படக் குறட்பாவினைத் தருகின்றார்.

நமது உடம்பில் இருக்கின்ற உறுப்புக்களில் எப்போதும் தண்ணீரிவேயே அஃதாவது ஈரமான இடத்திலேயே இருக்கும் உறுப்பு இந்த நா ஒன்று தான். நாவில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இது வெளிப்படையான உண்மை.

தண்ணீரில் இருக்கும் பொருள் அல்லது ஈரமான இடத்தில் இருக்கும் பொருள் சுடாது என்பது இயற்கை விதி. குளுமையாகவும் குளிர்ந்த தன்மையுடனும் இருப்பதாகும். அப்படியிருக்க நாவினைப்பற்றிப் பேசவந்த இடத்தில்