பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


குளிர்ந்த நீரில் இருக்கும் நா, 'சுடும்' என்று ஆசிரியர் கூறுகிறார் என்றால் நாம் சிந்திக்கத்தானே வேண்டும்.

நா சுட்டுவிடும் என்று குறிப்பதெல்லாம் நாவினால் சொல்லக் கூடிய சொற்கள் என்பதாகும். எனவே சொற்கள் அவ்வளவு கூர்மையான ஆற்றலுள்ளவை என்பதும் அவற்றைச் சொல்லுகின்ற நா மிகவும் பலம் பொருந்திய தென்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. குறட்பாவினைக் காணுவோம்.

தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

தீயானது சுடும் என்றால் நாம் அப்படியே ஏற்றுக்கொள்வோம். ஏன் : நெருப்புக்கு எரிக்கும் தன்மை யுண்டு வெப்பமும் உண்டு. ஆனால் நா சுடும் என்று கூறியதில் கருத்தாழம் அதிகம் இருக்கின்றதன்றோ! மேலும் தீயினை விட அதிக வன்மை பொருந்திய வெம்மை நாவில் இருக்கிறதே!

தீயினால் சுட்ட புண் ஆறிவிடுமே. ஆனால் நாவினால் சுட்டது ஆறி மறையும் என்று கூறாது என்றென்றும், வடுவாக இருந்துகொண்டே இருக்கும் என்றல்லவா, கூறி விட்டார். இதனை விரிப்பில் பெருகும், ஆதலால் சொற்களை அளவோடும் சுருக்கமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதாம்.

பெரும் புகழ் அடைந்து வாழ்ந்த பாண்டிய மன்னன் சிறிது தவறாகப் பேசியதால், அவன் கூறிய சொற்கள் குற்றம் செய்யாத கோவலனைக் கொலை செய்யுமாறு செய்து விட்டனவே. கோவலன் குற்றம் செய்தவன் என்று பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறினானாம். உடனே பாண்டிய மன்னன், பொற்கொல்லனை நோக்கி, 'கோவலனைக் கொல்லச் சிலம்புடன் கொண்டு வருக' என்று சொல்ல நினைத்து, நாவினைக் காப்பாற்ற மறந்து, காவலரை