பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சமையற்காரன் குலை நடுங்கிப் போனான். தனியாகக் கலிஞரைச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டான். சமையலில் முன்னேற்றம் இருந்ததோ என்னவோ அவனுக்குத் தெரியாது.

மறுநாள் மன்னர் கலிஞரைச் சந்தித்தவுடன் முதற் கேள்வியாக உணவைப் பற்றிக் கேட்டார், "இன்று எப்படிச் சாப்பாடு?" என்று கேட்டார். உடனே கவிஞர் 'இன்று தேவாமிர்தமாக இருந்தது' என்று கூறினார். மன்னருக்கு இதைக் கேட்டதும் பேரானந்தம் உண்டாகிவிட்டது. கவிஞரை நன்கு மகிழ வைத்துவிட்டோம் என்று பெருமிதம் கொண்டார்.

பின்னர்க் கவிஞரைப் பார்த்து, "நேற்று சமையலில் உப்புமில்லை, புளியுமில்லை. என்றீர்கள். இன்று தேவாமிர்தமாகச் சமையல் செய்து விட்டான் என்றீர்களே. அவ்வளவு விரைவில் இவ்வாறு அருமையாகச் செய்ய எப்படி மாறிவிட்டான்?" என்று வியந்து கேட்டார்.

உடனே கவிஞர் தேவாமிர்தத்திலும் உப்பும் புளியும் இருக்காதே என்று கூறினார். மனனனுக்கு அடங்காச் சிரிப்பு வந்து கவிஞரின் நகைச்சுவைப் பேச்சு முறையினை மிகவும் சுவைத்துச் சிந்தித்து ஆவன செய்தான். இவ்வாறு கருத்தாழமிக்க செய்திகளை நகைச்சுவையுடன் கூறுதல் நல்ல புலமைத் திறன் மிக்க அறிஞர்களுக்கே கூடும் என்பது உலகியல் உண்மையாகும்.

குடிமை :

'நகை' என்னும் பண்பாட்டிற்கு மகுடம் வைத்தது. போன்றதோர் இடம் திருக்குறளில் காணப்படுகின்ற தென்றால், அது 'குடிமை' என்று கூறப்படும் அதிகாரமாகும். நற்குண நற்செயல்கள் இயல்பாக அமையப் பெற்ற