பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


குடியில் பிறந்தவர்களைப்பற்றிக் கூறுவது தான் 'குடிமை' என்ற பகுதியாகும்.

அப் பெயரும் அக்கருத்தினையே வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணலாம். நற்குடியில் பிறந்தவர்களுடைய தன்மை என்று கூறப்படும் போது ஒழுக்கம், நாணுடைமை, வாய்மை முதலியன போன்ற சீரான பண்புகள் இயற்கையிலேயே தம்மிடம் கொண்ட பெரியார்களைப் பற்றிக் கூறுவதாகக் கொள்ளல் வேண்டும்.

அப்படிக் கூறிக்கொண்டு வருகின்றபோது நான்கு தலைசிறந்த பண்பாடுகள் கொண்ட குறட்யா வொன்று தருகின்றார். நற்குடியில் பிறந்தவர்களுக்கு இருக்கின்ற பற்பல அரிய குணங்களில் இந் நான்கும் இடம் பெறுவனவாகும். இந் நான்கு இன்ப குணங்களையும் வரிசைப்படுத்தி வெளியிடும்போது 'நகை' என்னும் பாண்பாட்டினையும் அந் நான்கில் ஒன்றாகக் கூறி முதலாவதாகவும் வைத்தார்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப போய்மைக் குடிக்கு.

இக் குறட்பா விளக்கம் தேவையில்லாமலேயே எளிமையில் புரிந்துவிடக்கூடிய ஒன்று தான் என்றாலும் இக் குறட்பா கொண்டுள்ள பெருங்குணங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு விளக்கம் தந்தாலும் கொள்ளும் என்பது சிறப்பான கருத்தென அறிதல் வேண்டும்.

நகை என்று கூறியதால் முகமலர்ச்சியும், ஈகையென்றதால் பிறர்க்குதவும் அரிய குணமும், இன் சொல் என்றதால் மனத் தூய்மையுடன் பிறரிடம் அன்பு காட்டிப் பழகும் பெருந்தன்மையும் இகழாமை என்றதால் மனிதப் பண்பாட்டின் தலை சிறந்த குணமும் கூறப்பட்டன.

6