பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


'வகை யென்ப' என்று விளக்கியதால் இவைகளெல்லாம் இயல்பாகவே தங்களுக்கு உரிய குணங்களாகக் கொண்டிருப்பார்கள் என்பது புலனாயிற்று.

'வாய்மைக் குடிக்கு' என்று கூறியதில் சிந்திக்கத் தகுந்த செறிவான கருத்தொன்றுண்டு. அஃதாவது எக்காலத்திலும் மாறுபாடில்லாத குடிவகையினைச் சேர்ந்தவர்கள் என்பதாம். வறுமை வந்த காலத்தில் சிலர் மாறுபட்டு விடுவது இயல்பு. அங்ஙனம் வறுமையே வந்து கொடுமைப் படுத்தினாலும் தங்கள் இயல்பில் மாறிவிடமாட்டார்கள் என்ற அருமையான பண்பாடு எடுத்தோதப்பட்டது.

'நகை' யென்று கூறியது, யாரிடமும் சிரித்தல் என்னும் பழக்கத்தைக் குறிப்பிடுகிறது என்பது மட்டுமன்று. மனிதனுக்கு முகமலர்ச்சி இன்றியமையாத அரிய சொத்தாகக் கருதப்பட வேண்டியதாயிற்று.

பெரிய மனிதர்கள் முகமலர்ச்சியுடன் தோன்றுவது பிற மக்களுக்கு எவ்வளவு பயலுடையதாக இருக்கும். பிறர் சேர்ந்து வாழ உதவுவதும் முகமலர்ச்சிதானே. கடுகடுத்த முகம் பிறரைப் பிரித்துத் தானே வாழ விடும். இப்படியான . கருத்துகளை நாம் நடைமுறைப் பழக்கத்தில் அன்றாடம் கண்டுவருகின்றோம்.

மலர்ச்சி :

தேவைப்பட்ட சில கருத்துரைகளைப் பேசி வருவருதற்காக ஒருவர் தெரிந்த ஒருவர் வீட்டுக்குச் சென்றார். சென்றதும் வீட்டிலிருந்தவர் வெளியில் வந்தார். வந்ததும், வந்தவரைப் பார்த்து, "எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு வந்தவர், "உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்று கூறினார். "அப்படியா, உட்காருங்கள்" என்றார்.

பிறகு இருவரும் பேச ஆரம்பித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டிய நயமான உண்மை யொன்று இருக்கின்றது. வந்தவர் முதலில்,