பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான் புகழ் கொண்ட தமிழ் நாடு.

என்று கவிக்குயில் பாரதியார் பாடினார்.

உலகத்தார் புகழ்ந்து பேசுகின்ற புகழுரைகளைத் தமிழகத்திற்கு வாங்கிக்கொடுத்த தனிச் சிறப்பு மகாகவி பாரதியாரைச் சார்ந்து நிற்பதாகும்.

தமிழனாகப் பிறந்த பெருமையினைப் பெரிதாகக் கருத வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும்.

இந்த நூலுக்கு பதிப்பாசிரியனாக இருந்து தொண்டாற்றுகின்ற வாய்ப்பினை மிகப் பெரிய நல்வாய்ப்பாகக் கருதி மகிழ்கின்றேன்.

என்னுடைய தந்தையார் திருக்குறளார் அவர்கள் எங்களுக்கு இளமையிலிருந்தே திருக்குறள் படிக்கின்ற பயிற்சியினை அளித்துள்ளார்கள், அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களையும் பதிப்பிக்கும் திட்டத்தினை மேற்கொண்டுள்ளேன்.

பொது மக்களின் ஆதரவினால் என்னுடைய இந்தத் தொண்டு வெற்றியடையும் என்று நம்புகிறேன்.

சிறியேனுடைய பதிப்புத் தொண்டிற்குப் பெருந்துணையாக விருந்து வரும் ஐயர் சங்க இலக்கியச் செம்மல் திரு. க. சண்முகசுந்தரனார்க்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நல்ல முறையில் அச்சிட்டுக் கொடுத்த அன்னாருடைய அகஸ்தியர் அச்சகத்தின் ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புள்ள
திரு. வீ. மு. பாலசுப்ரமணியன்