பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீ நட்பு

219



விட்டுச் செல்லுதல்; கல்லா-கல்வி அறிவில்லாத; மா- மிருகம், குதிரை; நமர்-நண்பர்; தலை-சிறந்தது. 814

5.செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

நட்புச் செய்தும், தமக்குப் பாதுகாவலினைத் தாராத கீழ்மக்களது தீய நட்பு ஒருவருக்கு இருப்பதை விட இல்லாமல் இருத்தலே நன்று.

ஏமம்-பாதுகாவல்; சாரா-தாராத; புன்கேண்மை-புல்லிய நட்பு, தீய நட்பு. 815

6.பேதை பெருங்கழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

அறிவில்லாதவனுடைய மிகவும் நெருங்கிய நட்பை விட அறிவுடையாரது நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நல்லது.

பேதை-அறிவில்லாதவர்; பெருங்கழீஇ-மிகவும் நெருங்கிய; ஏதின்மை-நட்பற்ற தன்மை;'பகைமை' என்றும் பொருள் கூறுவர். 816

7.நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

அன்பு சிறிதும் இல்லாமல் மேலுக்கு மட்டும் சிரித்து விளையாடும் குணமுடையவர் தம் நட்பினும் பகைவரால் வரும் தீங்குகள் பத்துக் கோடி மடங்கு மேலாகும்.

மேலுக்குச் சிறிது நட்புச் செய்வோரால் வரும் நன்மையினும் பகைவரால் வரும் நன்மை பத்துக் கோடி மடங்கு மிகும் என்றும் பொருள் கூறுவர். 817

8.ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

தம்மால் செய்ய இயலும் செயலையும் செய்ய முடியாதபடி கெடுபபவரின் நட்பினை அவருக்குத் தெரிவிக்காமலேயே விட்டு விலகுதல் வேண்டும்.