பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

திருக்குறள்



ஒல்லும்-இயலும்; கருமம்-செயல்; உடற்றுதல்-கெடுத்தல்; சொல்லாடார்- ஏதும் சொல்லாதவராய்; சோரவுடல்-தளர விடுதல், விட்டு விலகுதல். 818

9.கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

செய்யும் செயல் வேறாகவும், சொல்வது வேறாகவும் இருப்பாரது நட்பு ஒருவருக்குக் கனவிலும் துன்பத்தைத் தரும்.

இன்னாது-இன்பத்தைத் தராதது; அதாவது துன்பத்தைத் தருவது என்பது பொருள்; மன், ஒ என்னும் இரண்டிற்கும் பொருள் இல்லை; இரக்கங் காரணமாக வந்தன என்றும் சொல்லலாம். 819

10.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

தனியே வீட்டில் உள்ள போது நண்பராய் இருந்து பலர் கூடியுள்ள மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பினைச் சிறிதும் கொள்ளாமல் தடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

எனைத்தும்-எவ்வளவும், ஒருசிறு அளவும்; குறுகுதல்-அடைதல்; ஓம்பல்-தவிர்க, நீங்குக; மனைக்கெழீஇ-வீட்டில் நண்பராக இருந்து; கெழீஇ-நட்புச் செய்து; மன்று-சபை; மன்றம்-பொது இடம்; பழிப்பார்-பழித்துப் பேசுபவர்; தொடர்பு- நட்பு. 820

83. கூடா நட்பு


1.சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்தே பொருந்தி நடப்பவர் தம் நட்பு, தகுந்த இடம் வாய்க்கும் போது ஓங்கி அடித்தற்குப் பயன்படும் பட்டடையாகும்.

சீரிடம்-தகுந்த இடம்; எறிதல்-ஓங்கி அடித்தல்; பட்டடை-கொல்லன் உலைக் களத்தில் உள்ள ஒரு கருவி; நேரா நிரந்தவர்-உள்ளத்தால் நட்புச் செய்யாமல்