பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடா நட்பு

221



புறத்தே பொருத்தி நடப்பவர். அஃதாவது பகை உள்ளத்தோடு ஒழுகுபவர்; நேரா-(உள்ளத்தால்) கூடாதிருந்து; நிரந்தவர்- (தமக்கு வாய்ப்பு நேரும் வரை வெளிக்கு) நண்பராயிருப்பவர்.

விளக்கம்: கொல்லன் உலைக் களத்தில் உள்ள பட்டடை தக்க சமயம் வாய்க்கும் போது ஓங்கி அடித்தற்கு உதவுவது போல் புறத்தே நண்பர் போல் ஒழுகுவார் செய்யும் நட்பு சமயம் நேர்ந்ததும் தம் எண்ணத்தை முடித்துக் கொள்வதற்கே ஆகும். 821

2.இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

உறவினர் போல் இருந்து, உறவினர் அல்லாதவராக இருப்பவர் தம் நட்பானது பொது மகளிரின் மனம் போன்று உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

இனம் போன்று இனம் அல்லார்-ஒத்த உள்ளத்தினர் போல இருந்து ஒவ்வாத எண்ணமுடையவர், உற்றார் போல் இருந்து உற்றாரின் வேறுபட்டிருப்பவர்; மகளிர்-இங்கே இச்சொல் பொது மகளிரையே குறிக்கும். 822

3.பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

பல நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும், மனம் திருந்தி நட்பினர் ஆகுதல் நற்குண மாண்புகள் இல்லாதவர்க்கு இல்லை.

கற்றக் கடைத்தும்-கற்றிருந்த போதிலும்; மன நல்லர் ஆகுதல்-உள்ளத்தால் நட்பினர் ஆகுதல்; மாணார்-குணநலம் இல்லாதவர், பகைவர் எனினும் பொருந்தும். 823

4.முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

முகத்தால் இனியர் போன்று நடித்துச் சிரித்து மனத்தால் இனியர் அல்லாத வஞ்சகரை அஞ்சுதல் வேண்டும். 824

5.மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினாற் தேறற்பாற்று அன்று.