பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதல்வரைப் பெறுதல்

17


பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வர்களைப் பெற்றவர்களை ஏழு பிறப்புக்களிலும் துன்பங்கள் அணுகா.

எழு பிறப்பு-ஏழு வகைப் பிறப்பு. ஏழு தலைமுறைகள் எனவும் பொருள் கூறுவர்; பிறங்குதல்- அதிகரித்தல். 62 .

3.தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.

மக்களுடைய நல்வினையினாலே விளையும் பொருள் அவர்தம் பெற்றோரைச் சேரும். எனவே, மக்கட் செல்வமே ஒருவருக்குச் சிறந்த செல்வமாகும். அச்செல்வம் பெற்றோர் செய்த நல்வினைப் பயனால் அவரை வந்து அடையும். 63

4.அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தாய் தந்தையர் உண்ணும்போது அவர்தம் குழந்தைகள் உடனிருந்து தம் சிறிய கைகளால் துழாவிய உணவானது சுவையினால் மிகுந்த அமிழ்தத்தினும் மிக்க இனிமை யுடையதாம். 64

5.மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

தம்முடைய குழந்தைகளின் உடம்பைத் தொடுவது தாய் தந்தையரின் உடம்புக்கு இன்பம் தரும். குழந்தைகள் பேசும் சொற்கள் அவர்தம் தாய் தந்தையரின் செவிக்கு இன்பம் அளிக்கும்.

தம் குழந்தைகள் தம் உடம்பைத் தொடும்போது தாய் தந்தையரின் உடம்பு இன்பமடையும் என்று பொருள் கூறுவர். 65

6.குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

குழலோசையும் யாழிசையும் இனிமையுடையன. ஆனால், தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புற்ற பெற்றோர் அம்மழலைச் சொற்கள்