பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்தோம்பல்

21


9.புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு?

ஒருவனுடைய மனத்தின் கண் இருக்க வேண்டிய சிறந்த உறுப்பு அன்பேயாம். இடமும், பொருளும், ஏவல் செய்வோரும் ஆகிய வெளியுறுப்புக்கள் அன்பின் துணை கொண்டே பயன்படுவன. அந்த அன்பு ஒருவனிடத்து இல்லையாயின் அவற்றால் பயன் இல்லையாம்.

புறத்துறுப்பு-கை, கால், கண், செவி முதலிய உறுப்புக்களுமாம். 79

10.அன்பின் வழிய துயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பின் வழி நின்ற உடலே உயிரோடு கூடிய உடலாகும். அன்பின் வழிச் செல்லாதவருடைய உடல் உயிரோடு கூடிய உடலன்று; அஃது எலும்பைத் தோலால் போர்த்த உடலாகும்.

வழியது-வழி நிற்பது (இங்கு வழி நிற்கும் உடல்); உயிர்நிலை-உயிர் நிலைத்திருக்கும் இடம், உடல். 80

9. விருந்தோம்பல்


1.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

மனைவி மக்களோடு வீட்டில் இருந்து, பொருள் சம்பாதித்து நாம் வாழ்ந்து வருவது எதற்காக எனில் நம் வீட்டிற்குப் புதிதாக வருகின்றவர்களைப் பெருமைப்படுத்தி அவர்கட்கு வேண்டிய உதவிகளைப் புரிதற் பொருட்டே ஆகும்.

ஓம்புதல்-பாதுகாத்தல்; விருந்து-நமக்கு முன் பின் தெரியாத அயலார்; வேளாண்மை-உதவி. 81

2விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

புதிதாக நம்மை நோக்கி வந்த ஒருவர் நம் வீட்டின் வெளிப்புறத்திலே பசியோடிருக்க, நாம் உண்ணும் உணவு