பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறையுடைமை

39


9.நலக்குரியார் யாரெெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

அச்சத்தைக் தரத் தக்க கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலே, எல்லா நன்மைகளும் அடைவதற்குரியவர் எவர் என்றால், பிறருக்கு உரிமையானவளின் தோள்களைச் சேராதவரே ஆவர். 149

10.அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

ஒருவன் இல்லற நெறிக்கு அடங்கி நடக்காமல், அறம் அல்லாத பாவச் செயல்கள் பலவற்றைச் செய்பவனாக இருந்தாலும், பிறனுக்கு உரியவனின் பெண்மைக் குணத்தை விரும்பாமல இருப்பது நன்று.

அறன் வரையான்-அறநெறியைத் தனக்கு உரிமையாகக் கொள்ளாதவனாய்; பிறன் வரையாள்-பிறனுக்கு உரியவள். 150

16. பொறையுடைமை


1.அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

நிலம் தன்னைத் தோண்டுவார் கீழே விழாமல் அவரைத் தாங்கிக் கொள்கிறது. அது போலத் தம்மை அவமதிப்போர் துன்புறாத வண்ணம், அவர்கள் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்வதே (அறநெறியில்) முதன்மையானது ஆகும்.

அகழ்வார்.தோண்டுபவர்; தலை-சிறந்தது, முதன்மையானது. 151

2.பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

ஒருவன் அளவு கடந்த தகாத செயல்களைச் செய்யின், அதற்காகத் தாம் அவனைத் தண்டிக்க முடிந்த காலத்தும், அவன் மீது கோபம் கொள்ளாமல் அவன் செய்த குற்றத்