பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.2 திருக்குறள் இப்பால் 16. பொறையுடைமை என்பது, ஒருவன் ஒரு குற்றங் காரணத்தினாலே தனக்குக் குற்றஞ் செய்தால், தானு மவனுக்குக் குற்றஞ் செய்யாம லவன் செய்த குற்றங்களைப் பொறுக்கிறதாம். 151. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலை. என்பது ■ தன்னை வெட்டுகிறவனை விழாமல் தாங்கப்பட்ட பூமி யைப் போலத் தம்மை யிகழ்ந்து பேசுகிறவர்களைப் பொறுக் கிறதே முந் தின தர்மமென்றவாறு. து I 52. பொறுத்த லிறப்பினை யென்று மதனை மறத்த லதனினு நன்று என்பது ஒருவன் செய்த குற்றங்களைப் பொறுக்கிறது நல்லது: அந்தக் குற்றங்களை மனதிலே வையாம லப்பொழுதே மறக் கிறது, அந்தப் பொறுமையிலும் நல்ல தென்றவாறு. பொறுத்தலும் மனதிலே நினையாமல் மறக்கிறதும் நல்ல தென்பதாம்’ அதி 153. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை என்பது ஒருவனுக்குத் தரித்திரத்திலுந் தரித்திரமாவது, விருந்தாய் வந்தவர்களுக்கு உபகாரம் பண்ணாமல், இல்லை யென்கிறது: நன்மையிலும் நன்மை யாவது, ஒருவன் செய்த குற்றங்களைப் பொறுக்கிறதென்றவாறு. டு 1. தனக்குரியவான - என்பது அச்சு நூல் 2. குற்றம் - இது வேண்டாதசொல் 1. தலையாய 2. பிற்சேர்க்கை குறிப்புரை காண்க.