பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறக்கடவுள் கேடு செய்தலாவது, தருமம் அவனைவிட்டு நீங்கும் என்பதாம். து 208 இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து என்பது தான் தரித்திரன் என்று நினைத்து அந்தத் தரித்திரம் திர்கிற தற்காகப் பிறருக்குத் தீவினைகளைச் செய்யவேண்டாம்; தீவினையைச் செய்தால் பின்னையும் தரித்திரவான் என்றவாறு. ஒரு பிறப்பிலே செய்த தீவினை ஏழேழு பிறப்பும் தொடரு மென்பதாம். டு 206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னையடல் வேண்டா தான் என்பது துன்பங்களைச் செய்யும் குற்றமாகிய பாவங்கள் தன்னை வருத்தாமல் இருக்க வேண்டும் என்றால், பொல்லாத காரியங் களைப் பிறருக்குத்தான் செய்யாமலிருக்க வேணுமென்றவாறு. ஆர் 207. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென் றடும் என்பது எப்படிப்பட்ட பகையுடையவர்களும் ஒருவகையால் தப்பிப் பிழைப்பார்கள் தீவினையாகிய பகையுடையவரை அஃது எந்த விதத்திலேயும் தப்பாமல் பின் தொடர்ந்து சென்று கொல்லும் என்றவாறு. இT 208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வியாது அடியுறைந் தற்று என்பது பிறருக்குத் தீங்கு செய்தவர்கள் கெட்டுப் போகிறது எப்படி யென்றால், ஒருவனுடைய நிழல் அநேக துரம் போனாலும்