பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருக்குறள் வார்கள்; சரீர வாதையும் பண்ணுகிறதினாலே பாவமும் பழியும் வரும் என்பதாம். ľH 284. களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமந் தரும் என்பது பிறன் பொருளைத் திருடிக் கொள்கிறபோது சந்தோஷ மாய் இருக்கும்; அந்தப் பாபம் வருகிறபோது வெகு துக்கமாய் இருக்கும் என்றவாறு. களவினாலே பாவமும் பழியும் அதிகமாய் வரும் என்ப தாம். తిF 285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்க னில் என்பது அருளினது பெருமையை அறிந்து அன்புடையவர்களாய் நடக்கிறது, பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்கிற வர்களுக்கு இல்லை என்றவாறு. தமக்கு உரித்தான பொருள் தமக்குத் தங்காமல் போகிறது கண்டும் பிறன்பொருளை வஞ்சித்துக் கொள்ள நினைக்கிறது என்ன பலனைக் கருதி என்பதாம். டு 286. அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட் கன்றிய காத லவர் என்பது சிவனுக்கு ஈடேற்றமாகிய விரத சீலங்களிலே நின்று நடக்க மாட்டார் களவு செய்கிறதில் வெகு ஆசையை யுடையவர்கள் என்றவாறு. விரதசிலமாவது, நல்லறத்தைச் செய்து பொல்லாதவற்றை விடுதல். சிா 1. தக்காமல் என்றும். 2. போகிறதுண்டு என்றும் காகிதச் சுவடியில் திருத்தப்பட்டுள்ளன.