பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 5 I 298. புறந்துய்மை நீரா னமையு மகந்துாய்மை வாய்மையாற் காணப் படும் என்பது ஒருவனுக்கு உடம்பு சுத்தமாகிறது நீரினாலேயாம்; மனசு சுத்த மாகிறது வாய்மையாகிய மெய்சொல்லுகிறதினாலே யுண்டாம் என்றவாறு. உடம்பு சுத்தமாகிறதற்குத் தண்ணிரில்லாமல் வேறொன்றும் இல்லாததுபோல், மனசு சுத்தமாகிறதற்குச் சத்தியமில்லாமல் வேறொன்றும் இல்லை என்பதாம். تلے۔ | 299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு என்பது வெளியிலே இருக்கிற இருளைப் போக்கடிக்கிறதான விளக் குக்களெல்லாம் விளக்காகா பெரியோர்களுக்கு விளக்காவது மனத்திலே இருக்கிற இருளைக் கடியப்பட்ட பொய்யாமை யாகிய விளக்கே விளக்காம் என்றவாறு. உலகத்திற்கு விளக்காகிறது சூரியன் சந்திரன் நெருப்பு; இவைகளாலே போக்கடிக்கப்படாத உள் இருளைப் போக்கடிக் கின்றதால் பொய்யா விளக்கே விளக்காமென்பதாம். சிக 300. யாமெய்யாக் கண்டவற்று எளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற என்பது நாம் கண்ட மெய்நூல்'களான சகல சாஸ்திரங்களிலேயும் சத்தி யத்தைப் பார்க்கிலும் அதிகமாகச் சொல்லப்பட்ட தருமம் ஒன்று மில்லை என்றவாறு. மெய்நூல்களாவன, காமம் வெகுளி மயக்கம் என்று சொல் லப்பட்ட முக்குற்றங்களும், பிறப்புப்பிணி மூப்புச் சாக்காடு 1. மெய் + நூல் = மெய்ந்நூல் என்றிருத்தல் வேண்டும்.